கொரோனா தாக்குதல்: பலநாடுகள் கலந்து கொள்ளவிருந்த மிலன் போர்பயிற்சியை நிறுத்திய கடற்படை

  • Tamil Defense
  • March 5, 2020
  • Comments Off on கொரோனா தாக்குதல்: பலநாடுகள் கலந்து கொள்ளவிருந்த மிலன் போர்பயிற்சியை நிறுத்திய கடற்படை

பலநாடுகள் கலந்து கொள்ளும் போர்பயிற்சியான மிலன் போர்பயிற்சியை கொரோனோ தாக்குதல் காரணமாக கடற்படை நிறுத்தியுள்ளது.விசாகப்பட்டிணத்தில் மார்ச் 18 முதல் 28 வரை இந்த பயிற்சி நடக்கவிருந்தது.

இரஷ்யா,அமெரிக்கா உட்பட 42 நாடுகள் இந்த பயிற்சியில் கலந்து கொள்ளவிருந்தன.இந்திய கடற்படை நடத்தும் மாபெரும் பயிற்சியாக இந்த பயிற்சி இருந்தது.

கொரோனா தாக்குதல் அதிகரித்து வருவதால் இனிவரும் காலத்தில் 2500 பேருக்கு மருத்து சிகிச்சி அளிக்க வல்ல கட்டமைப்புகளை ஏற்படுத்த முப்படைகளை மத்திய அரசு கேட்டுள்ளது.

இந்தோனேசியா,மாலத்தீவு,ஆஸ்திரேலியா ,சோமாலியா,கென்யா
,மொசாம்பிக்,சூடான்,கத்தார்,தாய்லாந்து,மலேசியா,எகிப்து,பிரான்ஸ்,இலங்கை,வியட்நாம்,மியான்மர்,நியுசிலாந்து,அமெரிக்கா,இஸ்ரேல்,தான்சானியா,கோமாரோஸ்,சீசெல்ஸ்,புருனே,பிலிப்பைன்ஸ்,ஜப்பான்,இங்கிலாந்து,மடகாஸ்கர்,சௌதி,ஓமன்,மொரிசியஸ்,கம்போடியா,சிங்கப்பூர்,தென் ஆப்பிரிக்கா,தென் கொரியா,குவைத்,ஈரான்,இரஷ்யா உட்பட 42 நாடுகள் இந்த பயிற்சியில் கலந்துகொள்ளவிருந்தன.