
வெளிநாட்டு இராணுவ விற்பனை (எஃப்.எம்.எஸ்) வழியாக இந்திய கடற்படை வாங்க முனையும் மேலும் நான்கு விமானங்களின் விநியோகமும் 2022 ஜனவரி மாதத்திற்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய கடற்படை மே மாதத்தில் நான்கு “பி-8ஐ” நீண்ட தூர கடல் உளவு கண்காணிப்பு நீர்மூழ்கி எதிர்ப்பு போர் விமானங்களை பெற தயாராகிறது. இந்த விமானங்கள் உலகின் சிறந்த அதிநவீன உபகரணங்கள் மற்றும் திறன்களைக் கொண்டு கண்காணிக்க வல்லவை. இந்த விமானங்கள் தற்போது இந்திய கடற்படைக்கு விரிவான கண்காணிப்பை மேற்கொள்வதில் பெருமளவில் உதவுகின்றன.
ஒரு மூத்த கடற்படை அதிகாரி பைனான்சியல் எக்ஸ்பிரஸ் ஆன்லைன் ஊடகத்திடம் “இந்த கோடையில் வரும் விமானம் கோவா நோக்கி செல்லும், மற்றவை போர்ட் பிளேர் மற்றும் விசாகப்பட்டினம் உள்ளிட்ட அனைத்து தளங்களிலும் 2022 க்குள் பரவலாக நிறுத்தப்படும்.”
பைனான்சியல் எக்ஸ்பிரஸ் ஆன்லைனில் முன்னர் அறிவிக்கப்பட்டபடி, 2009 இல் கையெழுத்திடப்பட்ட 2.2 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தின் மூலம், இந்திய கடற்படை ஏற்கனவே எட்டு விமானங்களையும் பெற்று படையில் சேர்த்தது. இரு தரப்பினருக்கும் இடையிலான ஒப்பந்தத்தின்படி, மேலதிக ஆர்டருக்கான ஏற்பாடு இருந்தது. 2016 ஆம் ஆண்டில் இந்திய கடற்படை ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள நான்கு “பி-8ஐ” விமானங்களை ஆர்டர் செய்தபோது இது செயல்படுத்தப்பட்டது.