செய்வதறியாமல் திகைத்து நின்ற மருத்துவக் கூட்டமைப்பு-உதவிக் கரம் நீட்டிய இந்திய கடற்படை

  • Tamil Defense
  • March 28, 2020
  • Comments Off on செய்வதறியாமல் திகைத்து நின்ற மருத்துவக் கூட்டமைப்பு-உதவிக் கரம் நீட்டிய இந்திய கடற்படை

கோவா ஹெல்த் பணியாளர்களுக்காக கிட்டத்தட்ட 60000 முக கவசங்களை இந்திய மெடிக்கல் அசோசியேசன் ஆர்டர் செய்திருந்தது.டெல்லி வந்த அந்த முக கவசங்கள் கோவாவிற்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும்.

மக்கள் பணியே தலைசிறந்த பணி என உடனடியாக அதற்கு செவிசாய்த்த இந்திய கடற்படை இந்த முக கவசங்களை கோவாவிற்கு எடுத்துச் செல்ல களமிறங்கியது.

ஆனால் கோரானா பாதிப்பு காரணமாக கனரக வாகனங்கள் ஏதும் இயக்கப்படவில்லை.அடுத்து என்ன செய்வது என திகைத்து நின்ற மருத்துவ கூட்டமைப்பு தலைவர் இந்திய கடற்படையை உதவி செய்ய வேண்டியுள்ளார்.

கடற்படை தனது நெடுந்தூர கடற்சார் ரோந்து மற்றும் கண்காணிப்பு விமானமான இலுசின் 38SD (IL-38) விமானத்தை அனுப்பியது.

இந்திய விமானப்படையின் பாலம் விமானப்படை தளத்தில் இருந்து பொருட்களை எடுத்து அதே நாளிலேயே (27 Mar 2020) கோவாவின் ஐஎன்எஸ் ஹன்சா தளத்திற்கு திரும்பியது.