இந்தியரை கடத்திய சீன இராணுவம்-வெளியான அதிர்ச்சி தகவல்கள்

  • Tamil Defense
  • March 31, 2020
  • Comments Off on இந்தியரை கடத்திய சீன இராணுவம்-வெளியான அதிர்ச்சி தகவல்கள்

அருணாச்சல பிரதேச மாநிலத்தில் மெக்மஹான் கோடு அருகே உள்ள “மேல் சுபான்ஸிரி” மாவட்டம் அசாப்பிலா செக்டாரில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

கடந்த 19ஆம் தேதியன்று காலை டோக்லே சிங்காம், காம்ஷி சடார் மற்றும் ரோன்யா நாடே ஆகிய மூவரும் சில மூலிகைகளை பறித்துவிட்டு மீன்பிடித்து கொண்டிருந்த போது அத்துமீறி இந்திய எல்லைக்குள் புகுந்த சீன ராணுவ வீரர்கள் மூன்று பேரையும் தாக்கினர், இதில் டோக்லே சிங்காமை தவிர மற்ற இருவரும் மயிரிழையில் தப்பிக்க , டோக்லேவை சீன வீரர்கள் துப்பாக்கி முனையில் கடத்தி சென்றனர்.

இது குறித்து டாங்கின் சமுதாய மக்கள் அருணாச்சல பிரதேச மாநில ஆளுநர் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர். மேலும் கடத்தப்பட்ட நபரின் உறவினர்கள் மார்ச்23 ஆம் தேதி நாச்சோ காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளனர்.

இதுகுறித்து இந்திய தரைப்படையின் கிழக்கு கட்டளையகம் அதிகாரிகள் கூறும்போது இதுபற்றி தெரிய வந்ததும் அந்த பகுதியில் பணியமர்த்தப்பட்டுள்ள தரைப்படை வீரர்களிடம் இது குறித்து விசாரணை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறினர்.

டாங்கின் சமுதாய மக்கள் எல்லையோரம் வாழ்ந்து வருகின்றனர், சீன ராணுவத்தின் இத்தகைய அத்துமீறல்களால் அடிக்கடி தாங்கள் பாதிக்கப்படுவதாகவும் எதிர்காலத்தில் இத்தகைய நிகழ்வுகள் நிகழாமல் இருக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.