சவுதி வாங்கும் தரத்தில் இந்திய எம்.ஹெச்.60ரோமியோ உலங்கு வானூர்திகள் !!

  • Tamil Defense
  • March 26, 2020
  • Comments Off on சவுதி வாங்கும் தரத்தில் இந்திய எம்.ஹெச்.60ரோமியோ உலங்கு வானூர்திகள் !!

இந்தியா வாங்கவுள்ள எம்.ஹெச்.60 ரோமியோ உலங்கு வானூர்திகள் சவுதி வாங்கும் தரத்தில் கட்டமைக்கப்பட உள்ளன மேலும் கூடுதலாக சில கருவிகள் நமது தேவைக்கு ஏற்ப இணைக்கப்படும்.

நாம் வாங்கும் 24உலங்கு வானூர்திகளும் ராயல் சவுதி கடற்படை வாங்கிய 10 உலங்கு வானூர்திகளின் தரத்தில் கட்டமைக்கப்படும் என அமெரிக்க அரசின் வலைதளம் ஒன்றில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி நமது உலங்கு வானூர்திகள் கப்பல் எதிர்ப்பு போர்முறை மற்றும் நீர்மூழ்கி எதிர்ப்பு போர்முறை ஆகிய திறன்களை கொண்டிருக்கும். இந்த அமைப்புகளுக்கு துணையாக AN/AAS-44C(V) பலமுனை இலக்கு கண்காணிப்பு அமைப்பு, AN/AVS-9 இரவில் பார்க்கும் கருவிகள், AN/SSQ-36/53/62 சோனோபாய்கள்,ரேய்தியான் மார்க்54 நீரடிகணைகள் மற்றும் குழு பாதுகாப்புக்கான ஆயுதங்கள் இணைக்கப்படும்.

இவற்றுடன் நமது தேவைக்காக லாக்ஹீட் மார்ட்டின் ஏ.ஜி.எம் ஹெல்ஃபயர்114 ஏவுகணைகள், பி.ஏ.இ நிறுவனத்தின் அதிநவீன துல்லிய தாக்குதல் அமைப்பு ஆகியவை பொருத்தப்படலாம். ஆனால் நமது தேவைக்கான கருவிகள் பற்றி சரியான தகவல்கள் ஏதும் இல்லை ஆயினும் ஜேன்ஸ் நிறுவன கருத்துப்படி கோன்ஸ்பெர்க் கடற்படை தாக்குதல் ஏவுகணைகள் (உலகிலேயே முதலாவதாக) இந்த உலங்கு வானூர்திகளில் பொருத்தப்படும் வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது மேலும் அதிநவீன தகவல் தொடர்பு கருவிகளும் இதில் அடங்கும் வாய்ப்புகள் உள்ளன.