18 நாடுகளுக்கு குண்டுதுளைக்காத உடைகளை ஏற்றுமதி செய்யும் இந்தியா

  • Tamil Defense
  • March 11, 2020
  • Comments Off on 18 நாடுகளுக்கு குண்டுதுளைக்காத உடைகளை ஏற்றுமதி செய்யும் இந்தியா

இந்தியா தற்போது 18 நாடுகளுக்கு குண்டுதுளைக்காத உடைகளை ஏற்றுமதி செய்துவருவதாக நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு துறை அமைச்சர் இராஜ்நாத் சிங் அவர்கள் தெரிவித்துள்ளார்.

எந்த அளவுக்கு குண்டு துளைக்காத தயாரிக்கப்படுகிறது மற்றும் அதன் ஏற்றுமதி அளவு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் , 18 நாடுகளுக்கு இந்த உடைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றது என பதிலளித்துள்ளார்.நாடுகளின் பாதுகாப்பு கருதி நாடுகளின் பெயர்களை வெளியிட அவர் மறுத்துவிட்டார்.

கிட்டத்தட்ட 15 நிறுவனங்களுக்கு இந்த உடைகளை தயாரிக்க அனுமதி வழங்கியுள்ளதாகவும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தேவைகளை சமாளிக்க ஆண்டுக்கு பத்து லட்சம் என்ற வீதம் இந்த உடைகள் தயாரிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

வீரர்களுக்கு தேவைப்படும் நேரத்திற்கு ஏற்ப இந்த உடைக்கான ஏற்பாடு மற்றும் இருப்பு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

இதற்கு முன் வீரர்களுக்கு போதிய அளவு குண்டு துளைக்காத உடைகள் வழங்கப்படவில்லை என்றும் தற்போது 1.86லட்சம் உடைகள் வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.