
இந்திய எல்லைக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவுவதை தடுக்க காஷ்மீரின் குப்வாரா செக்டாரில் உள்ள பாக் நிலைகளை குறிவைத்து இந்திய இராணுவம் கடுமையான ஆர்டில்லரி தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்த தாக்குதலில் இராணுவம் ராக்கெட் லாஞ்சர்களை பயன்படுத்தியதாக பினான்சியல் எக்ஸ்பிரஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.பாக்கின் தொடர்ந்த தாக்குதல்களுக்கு பதிலடி தரும் வண்ணம் இந்த தாக்குதல்களை இராணுவம் நடத்தி வருகிறது.
குப்வாரா செக்டார் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவச் செய்யும் பாக்கின் திட்டத்திற்கு கடுமையான பதிலடியை இந்திய ராணுவம் வழங்கியுள்ளது.
இதற்கு முன் பூஞ்ச் செக்டார் வழியாக பயங்கரவாதிகளை ஊடுருவச் செய்ய பாக் முயற்சித்தது.கிட்டத்தட்ட 90 நிமிட சண்டைக்கு பிறகு இராணுவம் ஊடுருவலை தடுத்து நிறுத்தியது.
பாக் இராணுவம் நமது வீரர்கள் மற்றும் பொதுமக்களை குறிவைத்தே தாக்குதல்களை நடத்திவருகிறது.இதற்கு நமது பக்கம் இருந்து கடும் பதிலடிகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்திய இராணுவம் பினாகா ராக்கெட் லாஞ்சர்களை உபயோகித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.