இந்திய இராணுவ நிலையை ஆக்கிரமிக்க முயன்ற சீன இராணுவம்-தடுத்து விரட்டிய வீரர்கள்

  • Tamil Defense
  • March 11, 2020
  • Comments Off on இந்திய இராணுவ நிலையை ஆக்கிரமிக்க முயன்ற சீன இராணுவம்-தடுத்து விரட்டிய வீரர்கள்

சிக்கிம் மாநிலத்தில் இந்த மாத தொடக்கத்தில் தான் இந்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.சீனா எல்லையில் சில பகுதியில் இந்திய எல்லைக்கு அடிக்கடி சீன வீரர்கள் நுழைந்து இது எங்கள் பகுதி என கூறுவதுன்டு.

அடிக்கடி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறும்.இந்திய இராணுவ வீரர்களும் சம்பவ இடத்திற்கு சென்று சீன வீரர்களை தடுத்து திருப்பி அனுப்புவர்.சில முறை அமைதியாகவும் சில முறை மோதல்களுடன் இதுபோன்ற சம்பவங்கள் முடிவதுண்டு.

எடுத்துக்காட்டாக டோகலாம் சம்பவத்தின் போது சில மோதல்கள் வெடித்தது.அதன் பின் பிரச்சனை சுமூகமாம பேசி முடிக்கப்பட்டு சீன வீரர்கள் வெளியேறினர்.அதே போல இந்த மார்ச் மாத 3ம் தேதி ஒரு சம்பவம் நடந்துள்ளது.

சிக்கிம் எல்லையில் நாகு லா பகுதியில் 12 சீன வீரர்கள் நுழைந்துள்ளனர்.அங்கு எல்லையில் இருந்த இந்திய இராணுவத்தின் தற்காலிக நிலையை நீக்க முயன்றுள்ளனர்.

அவர்களை இந்திய இராணுவ வீரர்கள் விரட்டியடிக்க முடியாமல் தங்கள் எல்லைக்கு திரும்பினர்.பிரச்சனை இத்தோடு முடிந்திருந்தால் சாதாரண ஒன்றாக இருந்திருக்கும்.ஆனால் அதன் பிறகு நடந்ததே கொஞ்சம் வித்தியாசமானது.

இது முடிந்த உடனயே அடுத்து பெரிய அளவிலான சீன வீரர்கள் இந்த குறிப்பிட்ட இடத்திற்கு வரத் தொடங்கினர்.எப்போதும் சிறிய அளவிலான சீன வீரர்களே இந்த அத்துமீறல்களில் ஈடுபடுவர்.இந்த முறை பெரிய அளவில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

இதை வெற்றிகரமாக எதிர்கொண்ட இந்திய வீரர்கள் சீன வீரர்களை விரட்டி அடித்தனர்.