
லடாக்கில் பணிபுரிந்து வரும் இந்திய இராணுவ வீரர் ஒருவருக்கு கொரானா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.கோவிட்-19 தொற்றுக்கு ஆளான முதல் இந்திய இராணுவ வீரர் இவர் தான்.
கிடைத்த தகவல்படி,வீரரின் தந்தை ஈரானிற்கு புனித பயணம் சென்றுள்ளார்.அதன் பிறகு கடந்த பிப்ரவரி 27ல் இந்தியா திரும்பியுள்ளார்.அவர் நாடு திரும்பிய பிறகு அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரானா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி 25 முதல் மார்ச் 1 வரை இராணுவ வீரர் விடுமுறையில் வீட்டில் இருந்துள்ளார்.அதன் பிறகு மார்ச் 2ம் தேதி படையில் திரும்ப இணைய லடாக் ஸ்கௌட் திரும்பியுள்ளார்.
அவரது தந்தைக்கு மார்ச் 7ம் தேதி தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மார்ச் 7 முதல் இராணுவ வீரர் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார்.
அவரது மொத்த குடும்பமும் தற்போது SNM மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.