
காஷ்மீரில் தற்போது நடந்த சண்டையில் நான்கு லஷ்கர் பயங்கரவாதிகளை வீழ்த்தியுள்ளனர் இந்திய இராணுவ வீரர்கள்.
இந்த என்கௌன்டர் காரணமாக அனந்தநாக் மற்றும் குல்கம் மாவட்டத்தில் இணைய சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.லஷ்கர் பயங்கரவாதிகளுடன்,ஹிஸ்புல் பயங்கரவாதிகளும் இந்த சண்டையில் வீழ்த்தப்பட்டுள்ளனர்.
இராணுவத்தின் 19வது இராஷ்டீரிய ரைபிள்ஸ், காஷ்மீர் காவல் துறையின் சிறப்பு படை வீரர்கள் ஆகியோர் இணைந்து டையல்கம் பகுதியை சுற்றி வளைத்து இந்த தாக்குதலை மேற்கொண்டனர்.
தொடர்ந்து நடந்த சண்டையில் 4 பயங்கரவாதிகளும் வீழ்த்தப்பட்டனர்.நமது பக்கம் எந்த சேதமும் இல்லை.