இராணுவத்தின் புதிய துப்பாக்கியான SIG716 துப்பாக்கி

  • Tamil Defense
  • March 9, 2020
  • Comments Off on இராணுவத்தின் புதிய துப்பாக்கியான SIG716 துப்பாக்கி

இந்திய வீரர்கள் இன்பான்ட்ரி பயிற்சி மையத்தில் அமெரிக்கத் தயாரிப்பு  SIG716 G2 துப்பாக்கிகளுடன் பயிற்சி பெறும் கானொளிகள் தற்போது பரவி வருகின்றன.கடந்த டிசம்பரில் இந்த துப்பாக்கிகளை டெலிவரி செய்யத் தொடங்கி சிக் சார் நிறுவனம் இந்த வருட இறுதிக்குள் 72,400 துப்பாக்கிகளையும் டெலிவரி செய்ய உள்ளது.

இராணுவத்தின் அவரச தேவையை உணர்ந்து கடந்த பிப்ரவரியில் இந்த துப்பாக்கிகளை இந்திய இராணுவம் ஆர்டர் செய்தது.முன்னனியில் பயங்கரவாத எதிர்ப்பு பணியில் உள்ள வீரர்களுக்கு இந்த துப்பாக்கிகள் வழங்கப்படும்.மற்ற இன்பான்ட்ரி வீரர்களுக்கு 7 லட்சம் ஏகே-203 துப்பாக்கிகள் வழங்கப்படும்.இதற்கான ஒப்பந்தம் இந்த வருடத்திற்குள் மேற்கொள்ளப்படும்.

இந்திய இராணுவத்தின் அனைத்து சோதனைகளையும் கடந்து தான் இந்த சிக் சார் துப்பாக்கி தேர்வு செய்யப்பட்டது என அந்நிறுவனம் கூறியுள்ளது.

இது தவிர அமெரிக்கத் தயாரிப்பு எம்-4 துப்பாக்கியையும் பாரா வீரர்கள் உபயோகித்து வருகின்றனர்.மேலும் தற்போது Barrett M95 சினைப்பர் துப்பாக்கிகளையும் இணைத்து வருகின்றனர்.