200 – 8×8கவச வாகனங்களை நாடும் இந்திய தரைப்படை !!

  • Tamil Defense
  • March 18, 2020
  • Comments Off on 200 – 8×8கவச வாகனங்களை நாடும் இந்திய தரைப்படை !!

ஏறக்குறைய 200 8 × 8 கவச வாகனங்களுக்கான இந்திய இராணுவத் தேவைக்கு பதில்களைச் சமர்ப்பிக்க இந்திய நிறுவனங்களுக்கு இரண்டு வாரங்கள் மட்டுமே உள்ளன.

கவச சண்டை வாகனங்களுக்கான- (உளவு மற்றும் உதவி) (WH AFV [R & Sp] RFI ஏப்ரல் 1 அன்று நிறைவடைகிறது. பாக்கிஸ்தான் எல்லையோர பகுதிகளான பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் சமவெளிகளில் நிலைநிறுத்தப்பட்டுள்ள தரைப்படையின்
198 உளவு மற்றும் உதவி பட்டாலியன்களுக்கு வாகனங்கள் தேவை என்பதை இது தெளிவுபடுத்துகிறது.

RfI 22 நவம்பர் 2019 அன்று வெளியிடப்பட்டது. அதில் இந்த 8 × 8 கவச வாகனங்கள் ‘அதிஉயர் திறன் இயக்கம், போதுமான கவசப் பாதுகாப்பு மற்றும் எதிரி டாங்கிகளை அழிக்கவும் , பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளவும் பொருத்தமான ஒரு ஆயுத கட்டமைப்பை வழங்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.