அதிநவீன இலகுரக இயந்திர துப்பாகிகளை பெறப்போகும் இந்திய ராணுவம் !!

  • Tamil Defense
  • March 20, 2020
  • Comments Off on அதிநவீன இலகுரக இயந்திர துப்பாகிகளை பெறப்போகும் இந்திய ராணுவம் !!

இந்தியா இஸ்ரேல் ஆயுத தொழிற்சாலையுடன் தனது ராணுவத்திற்கு 16,479 ‘நெகேவ்’ இலகுரக இயந்திர துப்பாக்கிகளை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் நேற்று கையெழுத்திட்டது.

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதலுடன் ரூ .880 கோடி செலவில் 16,479 இலகுரக இயந்திர துப்பாக்கிகளை வாங்குவதற்காக இஸ்ரேல் ஆயுத தொழிற்சாலையுடன் கையகப்படுத்தும் ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சின் கையகப்படுத்தல் பிரிவு கையெழுத்திட்டுள்ளது ”என்று அதிகாரப்பூர்வ அரசாங்க அறிக்கை கூறியது.

அதிநவீன நெகேவ் 7.62X51 மிமீ இலகுரக இயந்திர துப்பாக்கியானது போரில் நிரூபிக்கப்பட்ட ஆயுதமாகும் மேலும் தற்போது உலகெங்கிலும் உள்ள பல நாடுகளால் இது பயன்படுத்தப்படுகிறது. இந்த ஆயுதமானது தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் இலகுரக இயந்திர துப்பாக்கிகளை விட அதிக சக்தி, திறன் மற்றும் தாக்குதல் வரம்பை கொண்டுள்ளது ”என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த டெண்டரின் கீழ் வாங்கப்படும் 16,479 நெகேவ் துப்பாக்கிகளானது விரைவான உடனடி கொள்முதல் ஆகும். ஆனால் இத்தகைய எல்எம்ஜிகளின் மொத்த தேவை கிட்டத்தட்ட 44,000 துப்பாக்கிள் ஆகும். ஆகவே மீதமுள்ளவை உள்நாட்டு தயாரிப்பு அல்லது கூட்டு தயாரிப்பாக இருக்குமா என்பது உறுதியாகத் தெரியவில்லை.

எனினும் இந்த விரைவான கொள்முதல் முன் வரிசை துருப்புக்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் மேலும் தரைப்படையின் போர் சக்தியை அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.