நவீனமயமாக்கல் உந்துதலில் சீனா பலத்தை குறைப்பதால் உலகின் மிகப்பெரிய தரைப்படையாக உருமாறும் இந்திய தரைப்படை !!
ஏறக்குறைய 14லட்சம் வீரர்களுடன், இந்திய இராணுவம் உலகின் மிகப்பெரிய தரைப்படையாக மாறி சீனாவை மிஞ்சியுள்ளது,
சீன ராணுவம் அதன் தரைப்படை வலிமையை பாதியாக குறைத்து, அதன் கடற்படை, விமானப்படை
மற்றும் நவீன தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துகிறது.
கடந்த ஆண்டின் பிற்பகுதியில் வெளியிடப்பட்ட டிஃபென்ஸ் ஆஃப் ஜப்பான் 2019 அறிக்கையின்படி, இந்தியா (14லட்சம் வீரர்கள்) மற்றும் வட கொரியாவை தொடர்ந்து சீனாவின் மூன்றாவது பெரிய தரைப்படை உள்ளது.
மக்கள் விடுதலை இராணுவம் (பி.எல்.ஏ) எப்போதும் இரண்டு மில்லியன் வீரர்களின் தோராயமான பலத்துடன் உலகின் மிகப்பெரிய இராணுவமாக கருதப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
வருங்காலத்தில் இந்திய தரைப்படையும் நவீனமயமாக்கல் காரணமாக சுமார் 1 லட்சத்து 50ஆயிரம் வீரர்கள் அளவுக்கு ஆட்குறைப்பு செய்ய உள்ளது இதற்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் வரை ஆகும் என சொல்லப்படுகிறது.