நவீனபடுத்தப்படும் இந்திய விமானப்படையின் ஐ.எல்78 டேங்கர்கள் !!

  • Tamil Defense
  • March 28, 2020
  • Comments Off on நவீனபடுத்தப்படும் இந்திய விமானப்படையின் ஐ.எல்78 டேங்கர்கள் !!

2020-21 ஆண்டிற்கான விமானப்படையின் கொள்முதல் திட்டங்களின் படி இந்திய விமானப்படை தனது ஆறு ஐ.எல்78 டேங்கர்களின் ஏவியானிக்ஸ், முன்னெச்சரிக்கை அமைப்பு மற்றும் என்ஜின்களை நவீனப்படுத்த உள்ளது.

இதற்கென இஸ்ரேலிய EL/W- 2090 முன்னெச்சரிக்கை அமைப்பும், நவீன ஏவியாட்விகாடெல் பி.எஸ் 90-76ஏ என்ஜின்களும் வாங்கப்பட உள்ளன.

இந்த ரஷ்ய விமானங்கள் நீண்ட காலமாக சேவையில் உள்ளன, பல்வேறு சமயங்களில் இவை நாட்டிற்கு பெரும் உதவியாக அமைந்துள்ளன. ஆயினும் அதிக பராமரிப்பு செலவுகள் மற்றும் ஸ்பேர்கள் கிடைப்பது சிக்கலாக உள்ளதாலும், 11 புதிய அதிநவீன சி17 விமானங்களின் வரவாலும் இவை சிறிது ஒதுக்கப்பட்ட நிலையில் உள்ளன. ஆகவே விமானப்படை இவற்றை நவீனபடுத்தி அடுத்த 15வருடங்களுக்கு பயன்படுத்த தீர்மானித்துள்ளது.

இந்திய விமானப்படை ஐ.எல்76 போக்குவரத்து விமானங்களையும் இயக்கி வருகிறது அவற்றில் ஏற்கனவே 3விமானங்கள் மேற்குறிப்பிட்ட நவீன என்ஜின்களை பெற்றுள்ளன ஆகவை மீதமுள்ள விமானங்கள் இந்த என்ஜின்களை பெறுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஆனால் இவை நவீன ஏவியானிக்ஸ் அமைப்புகளை பெறும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எது எப்படியோ புதிய விமானங்களை வாங்குவதே சிறந்த தீர்வாகும், அரசு இதற்கென நிதியை ஒதுக்கினால் மட்டுமே இது சாத்தியப்படும்.