ரஷ்யா ,போலந்து நாடுகளை தோற்கடித்து அர்மீனியாவிற்கு ரேடார் சப்ளை செய்ய உள்ள இந்தியா

  • Tamil Defense
  • March 1, 2020
  • Comments Off on ரஷ்யா ,போலந்து நாடுகளை தோற்கடித்து அர்மீனியாவிற்கு ரேடார் சப்ளை செய்ய உள்ள இந்தியா

இரஷ்யா மற்றும் போலந்து நாடுகளை டென்டரில் தோற்கடித்து சுமார் 40மில்லியன் டாலர்களுக்கு ரேடாரை ஆர்மீனியா நாட்டிற்கு வழங்க உள்ளது இந்தியா.

இந்த ஒப்பந்தம் படி இந்தியா சுமார் 40 மில்லியன் டாலர்களுக்கு இந்தியா சொந்தமாகவே மேம்படுத்திய ஸ்வாதி ரேடாரை வழங்கும்.இதற்கான செயல்முறை ஏற்கனவே தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஸ்வாதி என்பது ஒரு weapon Locating Radar(WLR) ஆகும்.இது இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓவின் தயாரிப்பு ஆகும்.

இந்த ரேடாரை தற்போது இந்தியாவின் பாரத் டைனமிக் நிறுவனம் தயாரித்து வழங்கும்.

அரசுத் தகவல்கள்படி இந்த ஒப்பந்தம் இந்தியாவின் மேக் இன் இந்தியா திட்டத்திற்கு ஒரு பெரிய முன்னேற்றம் ஆகும்.

இந்தியா,இரஷ்யா மற்றும் போலந்து நாடுகளின் ரேடார்களை ஆராய்ந்த அராமினியா நாடு பல்வேறு கட்ட சோதனைகளை நடத்தியது.இதில் இந்தியாவின் ஸ்வாதி ரேடார் நம்பகத்தன்மை உடையதாய் தேர்ந்தெடுக்கப்பட்டது.

காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் தற்போது இந்திய இராணுவம் இந்த ஸ்வாதி ரேடார்களை பயன்படுத்தி வருகிறது.எந்த இடத்தில் இருந்து பாக் தாக்குதல்களை நடத்துகிறது என கண்டறிந்து இராணுவத்திற்கு தெரிவிக்கவே இராணுவம் இந்த ரேடாரை பயன்படுத்தி வருகிறது.

இவ்வாறு எதிரி எங்கிருந்து தாக்குகிறான் என அறிந்தால் அந்த இடத்தை நாம் மற்ற ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடத்த முடியும்.