
கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ஈரானில் உள்ள இந்தியர்களை மிக வேகமாக மீட்க , அவர்களை அங்கேயே பரிசோதனை செய்து மீட்க மொத்த லேப் உபகரணங்களை ஈரானிற்கு அனுப்பியுள்ளது இந்தியா.ஈரானில் தனித்துவிடப்பட்டுள்ள மொத்த இந்தியர்களையும் மீட்க இந்தியா தன்னால் ஆன அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது.
இந்த லேப் உபகரணங்களுடன் இந்தியா வைராலஜி டிபார்ட்மென்டை சேர்ந்த ஒரு அறிவியலாளரையும், இந்தியன் மருத்துவ ஆராய்சி கழகத்தை சேர்ந்த மூன்று அறிவியலாளர்களையும் அனுப்பியுள்ளது.
ஈரானில் லேப் அமைத்து அங்கேயே இந்தியர்கள் பரிசோதனை செய்யப்படுவர்.சோதனையில் நோய் தொற்று இல்லாதவர்கள் உடனடியாக நாடு திரும்பலாம்.எல்லாம் முடிந்த பிறகு இந்த லேப் ஈரான் நாட்டிற்கே வழங்கப்படும்.ஈரான் நாட்டின் கஸ்டம்ஸ் அனுமதி பெற தாமதமாகி வருவதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.