புதிய கார்பைன் ரக துப்பாக்கிகளை வாங்க விரையும் இந்திய தரைப்படை !!

  • Tamil Defense
  • March 26, 2020
  • Comments Off on புதிய கார்பைன் ரக துப்பாக்கிகளை வாங்க விரையும் இந்திய தரைப்படை !!

சமீபத்தில் இஸ்ரேலுடன் 16,000 இலகுரக இயந்திர துப்பாக்கிளை வாங்க ஒப்பந்தம் கையெழுத்திட்ட கையோடு சுமார் 553மில்லியன் டாலர்கள் மதிப்பில் 93,855 கராக்கல் “கார்816” (CARACAL CAR816) ரக கார்பைன்களை வாங்க ஒப்பந்தம் செய்ய இந்திய தரைப்படை தயாராக உள்ளது.

தற்போது இந்திய ராணுவம் ஸ்டெர்லிங் 9mm கார்பைன்களை பயன்படுத்தி வருகிறது.
இந்த துப்பாக்கிகள் இந்திய ராணுவத்தால் 1960 காலகட்டத்தில் வாங்கப்பட்டன, தற்போது நவீனமயமாக்கல் காரணமாக இவை ஒதுக்கப்பட்டு புதிய கார்பைன்கள் வாங்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த புதிய “கார்816” துப்பாக்கிகள் ஏ.ஆர்15 துப்பாக்கியின் வடிவமைப்பை அடிப்படையாக கொண்டவை. இவற்றின் எடை 3.4கிலோ, மேலும் ஏகே47 ரக துப்பாக்கிகளுக்கு இணையான சக்தியுடன் நிமிடத்திற்கு 750 முதல் 950துப்பாக்கிகள் வரை சுடக்கூடியவை ஆகும்.

பழைய ஸ்டெர்லிங் 9mm கார்பைன்களை படிப்படியாக தரைப்படை ஒதுக்கும் ஆனால் அதே நேரத்தில் கராக்கல் நிறுவனம் ஒப்பந்தம் கையெழுத்தானதிலிருந்து ஒரு வருட காலத்திற்குள் அனைத்து துப்பாக்கிகளையும் தயாரித்து ஒப்படைக்க வேண்டும் என்பது நிபந்தனையாகும்.