“சூரன்”-இந்தியாவின் முதல் ஆளில்லா கவச வாகனம்

போர் என்று வரும் போது வீரர்களின் உயிரிழப்பை குறைக்க இந்தியாவின் முதல் ஆளில்லா கவச வாகனமான “சூரன்” அடுத்த மாதம் இந்திய இராணுவம் சோதனை செய்யவுள்ளது.

போர் காலங்களில் மிக நேர்த்தியாக செயல்பட வல்ல இந்த புதிய கவச வாகனம் இந்திய இராணுவத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.சூரன் வாகனம் ஏற்கனவே களசோதனையில் ஈடுபடுத்தப்பட்டு தற்போது தயாரிப்பிற்கு தயாராக உள்ளது.
வாகனத்தின் திறனை மேலும் மேம்படுத்த உள்ளதாக டிபன்ஸ் மாஸ்டர் இந்தியா என்ற தனியார் நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டென்னிஸ் எபெனெசர் தெரிவித்துள்ளார்.அடுத்த மாதம் சென்னையில் இந்த வாகனத்தை இந்திய இராணுவம் சோதனை செய்யும்.

வாகனத்தை கட்டுப்படுத்தி அறையில் இருந்து இயக்க முடியும்.வாகனத்தில் ஒரு துப்பாக்கியும் பொருத்தப்பட்டுள்ளது.அதையும் ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்க முடியும்.

அனைத்து வகை நிலப்பகுதியிலும் இயங்கும் வல்லமை பெற்றது.பெட்ரோல் என்ஜின் கொண்டது.தொலைதூர
கேமிரா,அதிநவீன புரோசசர்ஸ்,கட்டுப்படுத்தி அமைப்புகள்,சென்சார்கள் என அனைத்தும் பெற்றுள்ளது.