
கொரானா உலகையே அச்சுறுத்தும் வேளையில் ஒற்றுமையாக செயல்பட்டால் இதிலிருந்து வெளிவரலாம்.இதற்கு தனது பங்களிப்பை அளிக்கும் பொருட்டு இந்தியா தான் பாதிக்கப்பட்டிருந்தாலும் பல உலக நாடுகளுக்கு தனது ஆதரவு உதவிகரத்தை நீட்டி வருகிறது.
இந்நிலையில் கொரானாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள இத்தாலிக்கு தனது உதவிக்கரத்தை இந்தியா நீட்டியுள்ளது.மருத்துவ உதவிகள் வழங்கியுள்ளது.இந்தியாவே கொரானா பாதிப்பிற்கு உள்ளாகியுள்ள நிலையிலும் உதவி செய்துள்ளது அனைவரின் பாராட்டுதலையும் பெற்றுள்ளது.
இத்தாலியில் சனி அன்று மட்டுமே 780 பேர்கள் உயிரிழந்துள்ளனர்.மொத்தம் இதுவரை 5000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அதே போல இந்தியாவிலும் கிட்டத்தட்ட 400 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதுவரை ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்திய மெடிக்கல் சப்ளையை வரவேற்று நன்றி தெரிவித்துள்ள இத்தாலிய வெளியுறவு அமைச்சகம் ” இந்த நிலையில் எங்களுக்கு உதவி செய்துள்ள நட்பு நாடாக இந்தியாவிற்கு நன்றியுடன் இருப்போம்” என கூறியுள்ளது.
இந்திய விமானப்படையின் சி-17 விமானம் தான் இந்த மெடிக்கல் சப்ளைகளை இத்தாலிக்கு
கொண்டு சென்று வழங்கியுள்ளது.
இத்தாலி தவிர பூடான் ,மாலத்தீவு மற்றும நேபால் போன்ற நாடுகளுக்கும் உதவிகள் செய்து வருகிறது.சீனாவிற்கும் உதவி செய்துள்ளது.மேலும் சார்க் நாடுகளுக்கு உதவ மருத்துவ குழு தயாராக இருப்பதாக இந்தியா கூறியுள்ளது.
மேலும் இந்தியாவில் கொரானா பரவுதலை தடுக்க பல்வேறு கட்ட முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.சுய தனிமைப்படுத்துதல் மிக பிரதானமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.