400 இந்தியர்களை ஈரானில் இருந்து அடுத்த இரு தினங்களில் மீட்க உள்ள இந்தியா

  • Tamil Defense
  • March 13, 2020
  • Comments Off on 400 இந்தியர்களை ஈரானில் இருந்து அடுத்த இரு தினங்களில் மீட்க உள்ள இந்தியா

அடுத்த இரு தினங்களில் இந்தியா ஈரானில் உள்ள 400 இந்தியர்களை மீட்க உள்ளது.மீட்கப்படும் அனைத்து நபர்களும் இராணுவம் அமைத்துள்ள மருத்துவ முகாம்களில் கண்காணிக்கப்படுவர் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இன்று ஏர் இந்தியா விமானம் 150 இந்தியர்களுடன் ஈரானில் இருந்து இந்தியா திரும்புகின்றனர்.அவர்கள் அனைவரும் ஜெய்சல்மீரில் இந்திய இராணுவம் அமைத்துள்ள முகாம்களில் கண்காணிக்கப்படுவர்.

அடுத்த தொகுதி 250 பொதுமக்கள் நாளை அதாவது மார்ச் 14 அன்று மீட்கப்பட்டு அதே ஜெய்சல்மீருக்கு அழைத்து செல்லப்படுவர்.

அடுத்தடுத்து இந்தியர்கள் மீட்கப்பட உள்ளதால் ஜோத்பூர்,ஜான்சி,கோரக்பூர் ,கொல்கத்தா,ஜெய்சல்மீர்,சென்னை மற்றும் டியோலலி ஆகிய பகுதிகளில் மருத்துவ கண்கானிப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன என கலோனல் ஆனந்த் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பே விமானப்படைக்கு சொந்தமான சி-17 விமானத்தில் புனித பயணம் செய்த 57 பேர் மீட்கப்பட்டனர்.