
இந்தியாவின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடந்த புதன் அன்று வெளியிட்ட தகவல்படி, கொரானாவால் பாதிக்கப்பட்ட இத்தாலிக்கு இந்திய மருத்துவர் குழுவை அனுப்ப உள்ளதாக தெரிவித்திருந்தார்.இந்த மருத்துவர்கள் குழு இந்தியர்களுக்கு கொரானா பாதிப்பு குறித்து ஆராயும்.
தற்போது ஈரானில் இருந்து 58 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.மேலும் குறைந்த அளவு விமானங்களை இயக்கி மீதமுள்ள இந்தியர்கள் நாடு திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
இன்று இந்த மருத்துவ குழு இந்தியர்களை பரிசோதித்தது முடிந்த அளவில் அவர்களை விரைவாக நாடு திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
கொரானா சோதனை தொற்று இல்லாதவர்கள் அடுத்த விமானத்தில் உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது ஈரானில் 6000 இந்தியர்கள் பல்வேறு பகுதிகளில் உள்ளனர்.1100 பேர் புனித பயணம் சென்றவர்கள்.300 மாணவர்கள் மற்றும் 1000 மீனவர்கள் இதில் அடக்கம்.
முதல் தொகுதியாக நோய்தொற்று இல்லாத 58 இந்தியர்கள் ஈரானில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.