அடுத்த தலைமுறை குறுந்தூர ஏவுகணை தயாரிக்கும் இந்தியா !!

  • Tamil Defense
  • March 25, 2020
  • Comments Off on அடுத்த தலைமுறை குறுந்தூர ஏவுகணை தயாரிக்கும் இந்தியா !!

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமும் அதன் மற்ற பிரிவுகளும் இந்திய விமானப்படையுடன் இணைந்து அடுத்த தலைமுறை குறுந்தூர ஏவுகணைகள் (NGCCM – Next Generation Close Combat Missile) தயாரிப்புக்கான பணிகளை துவக்கியுள்ளன.

இந்த அடுத்த தலைமுறை குறுந்தூர ஏவுகணைகளின் பணிகள் முடிவடைய சுமார் 7 முதல் 10ஆண்டுகள் வரை ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் மூன்று பிற மேம்பட்ட வடிவங்களை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த ஏவுகணைகளை நமது ஐந்தாம் தலைமுறை விமானமான ஆம்காவின் (AMCA – Advanced Multirole Combat Aircraft) மார்க் 1 மற்றும் 2 ஆகிய ரக விமானங்கள் தங்களது “உள் ஆயுத கிட்டங்கியிலும்” (INTERNAL WEAPONS BAY) சிறகிலும் (Wing Pylons) சுமந்து செல்லும். மேலும் ரேடாரரில் சிக்கும் வாய்ப்புகளை குறைக்க சிறப்பு கலவை விமானத்தில் பூசப்படும் என தெரிகிறது.