Breaking News

கொரானாவை கட்டுப்படுத்த உதவுங்கள்-இந்தியாவிற்கு ஈரான் கோரிக்கை

  • Tamil Defense
  • March 15, 2020
  • Comments Off on கொரானாவை கட்டுப்படுத்த உதவுங்கள்-இந்தியாவிற்கு ஈரான் கோரிக்கை

கொரானாவை எதிர்த்து போரிட தங்களுக்கு உதவுமாறு இந்தியாவிற்கு ஈரான் கோரிக்கை விடுத்துள்ளது.ஈரான் தலைவர் ஹசன் ருஹானி அவர்கள் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு இது குறித்து கடிதம் எழுதியுள்ளார்.

கோரானாவிற்கு எதிரான தங்களது போராட்டம் அமெரிக்க பொருளாதார தடைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கொரானாவை கட்டுப்படுத்த சர்வதேச அளவில் நடவடிக்கை தேவை என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

வைரஸ் பரவுதலுக்கு எந்தவிசயமும் தடை கிடையாது.எந்தசார்பற்றும் அனைத்து பகுதிகளிலும் பாரபட்சமின்றி பரவி வருகிறது என அவர் தெரிவித்துள்ளார்.