இரு பாக் கமாண்டோக்கள் மற்றும் மூன்று பயங்கரவாதிகளை வீழ்த்திய இந்திய இராணுவம்; பாக் நிலைகள் மீது கடும் தாக்குதல்

  • Tamil Defense
  • March 22, 2020
  • Comments Off on இரு பாக் கமாண்டோக்கள் மற்றும் மூன்று பயங்கரவாதிகளை வீழ்த்திய இந்திய இராணுவம்; பாக் நிலைகள் மீது கடும் தாக்குதல்

பாக் உட்பட பலநாடுகள் கொரானா பீதியில் ஆழ்ந்துள்ள நேரத்தில் பாக் இராணுவம் இந்திய அமைதியைக் குழைக்கும் பணியை மட்டும் நிறுத்திவிடவில்லை.தொடர்ந்து பயங்கரவாதிகளை இந்தியாவிற்குள் அனுப்ப முயற்சித்தே வருகிறது.அதே போல இன்றும் எல்லைக் கோட்டின் டெக்வார் செக்டாரில் பயங்கரவாதிகள் மற்றும் பேட் படை வீரர்களை அனுப்பி பெரிய பயங்கரவாத செயலை நடத்த முயற்சித்துள்ளது.அதை நமது வீரர்கள் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர்.

இந்திய இராணுவம் உடனடியாக அளித்த பதிலடியில் இரு பயங்கரவாதிகள், இரு பேட் படையினர் மற்றும் மூன்று பாக் வீரர்கள் வீழ்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பயங்கரவாத படைகள் ஊடுருவ ஏதுவான பாக் இராணுவத்தின் முன்னனி நிலைகளில் உள்ள பாக் வீரர்கள் இந்திய நிலைகளை தாக்க தொடங்கியுள்ளனர்.இதற்கு கடுமையான பதிலடியை இந்திய இராணுவம் வழங்கியுள்ளது.

பயங்கரவாதிகளை எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியை நெருங்கியது இந்திய வீரரகள் தாக்க தொடங்க பயங்கரவாதிகள் மாட்டிக்கொண்டனர்.பயங்கரவாதிகளின் உடல்கள் எல்லைக் கோடு அருகிலேயே கிடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய இராணுவ தாக்குதலில் இரு பங்கர்கள் சிதறடிக்கப்பட்டு மூன்று பாக் வீரர்கள் வீழ்த்தப்பட்டுள்ளனர்.

லஷ்கர் மற்றும் ஜெய்ஸ் பயங்கவாதிகளுக்கு பாக் இராணுவம் பயிற்சி வழங்கி அவர்கள் பேட் கமாண்டோக்களாக மாற்றி வருகிறது.