அப்பாச்சி போன்ற வானூர்தி தயாரிக்கும் ஹால்-புதிய ஆச்சரிய தகவல்கள்

  • Tamil Defense
  • March 3, 2020
  • Comments Off on அப்பாச்சி போன்ற வானூர்தி தயாரிக்கும் ஹால்-புதிய ஆச்சரிய தகவல்கள்

இந்தியாவின் ஏரோஸ்பேஸ் நிறுவனமான ஹால் நிறுவனம் 12 டன் எடையுடைய அப்பாச்சி போன்றதொரு தாக்கும் வானூர்தியை தயாரிக்க உள்ளதாக கூறியுள்ளது.மேலும் 2027க்குள் இந்த வானூர்தி தயாராகும் எனவும் கூறியுள்ளது.
தயாராகும் இந்த வானூர்தி அப்பாச்சி போன்ற வானூர்திகளுக்கு இணையாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹால் நிறுவனத்தின் சேர்மேன் மற்றும் மனேஜிங் டிரேக்டர் மாதவன் அவர்கள் கூறுகையில் இந்த புதிய வானூர்தி மேம்பாடு வருங்காலத்தில் 4 லட்சம் கோடி அளவுக்கு வானூர்திகளை இறக்குமதி செய்யப்படுவதை தடுக்கும் என கூறியுள்ளார்.

முதற்கட்ட வடிவமைப்பு பணிகள் முடிவடைந்துள்ளதாகவும் 2023ல் முதல் மாதிரி வானூர்தி தயாராகும் நிலையில் அதன் பிறகு 500 வானூர்திகள் வரை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக மாதவன் அவர்கள் கூறியுள்ளார்.

முதற்கட்ட வடிவமைப்பு மற்றும் முதல் மாதிரி வானூர்தி தயாரிக்க ஹால் நிறுவனத்திற்கு 9400 கோடிகள் தேவைப்படுவதாக கூறியுள்ளார்.2020ல் இதற்கு அனுமதி கிடைக்கும் பட்சத்தில் 2027ல் முதல் வானூர்தி தயாராகிவிடும் என அவர் கூறியுள்ளார்.

தேஜஸ் விமானத்திற்கு பிறகு இந்த புதிய புரோஜெக்ட் ஹாலிற்கு பெரிய திட்டமாக அமையும்.முதல் கட்ட வடிவமைப்பு பணிகள் நடந்து வருவதாகவும் இதற்காக விமானப்படை மற்றும் கடற்படையிடம் பேசிவருவதாகவும் அவர் கூறியுள்ளார்.இராணுவம் மற்றும் விமானப்படைக்கு தயாரிக்கப்படும் வானூர்தி கடற்படைக்கு தயாரிக்கப்படும் வானூர்தியை விட சற்று மாறுதலாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

இரு என்ஜின்கள் கொண்டதாக இந்த வானூர்தி இருக்கும்.கப்பல்களில் ஆபரேசன் நடத்துமளவுக்கு இறக்கைகள் மடித்துக் கொள்ளலாம்.வான் தாக்குதல்,வான் போக்குவரத்து,மீட்பு பணிகள் போன்றவற்றில் இந்த வானூர்தியை உபயோகிக்கலாம்.