Breaking News

COVID19 தனது அலுவலகங்களை மூடும் HAL !!

நாட்டின் ஒரே விமான தயாரிப்பு நிறுவனமான HAL கொரோனா தொற்று காரணமாக தனது தயாரிப்பு பிரிவு மற்றும் அலுலகங்களை மார்ச்31 வரை மூட உத்தரவு பிறப்பித்துள்ளது.

HAL செய்தித்தொடர்பாளர் கோபால் சுடர் கூறும்போது “குறைந்த எண்ணிக்கையிலான பராமரிப்பு, நீர் விநியோகம், மின்சார விநியோகம் மற்றும் பாதுகாப்பு சார்ந்த பணியாளர்கள் மட்டுமே பணிக்கு வர வேண்டியதாகிறது” என்றார். மேலும் கூறும்போது இந்த சில நாட்கள் வேலைநிறுத்தம் திட்டங்களில் ஒன்றும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது சில நடவடிக்கைகள் மூலம் இந்நேர விரயத்தை ஈடுகட்ட முடியும் என்றார்.

கர்நாடகா, மஹாராஷ்டிரா, மேற்கு வங்காளம், உத்தர பிரதேசம் மற்றும் தெலுங்கானா அரசுகளின் அறிவுறுத்தல்படி பெங்களூர், நாசிக், மும்பை, பாரக்பூர்,லக்னோ, கங்கூர், ஹைதராபாத் ஆகிய இடங்களில் உள்ள HAL அலுவலகங்கள் மற்றும் தயாரிப்பு பிரிவுகள் மார்ச்24 முதல் மார்ச்31வரை முடப்பட்டிருக்கும்.

மேலும் தில்லி, விசாகப்பட்டினம், சென்னை தாம்பரம் ஆகிய பகுதிகளில் உள்ள HAL பிரிவுகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும்.

HAL நிறுவனத்தின் பணிகள் ஒருநாள் நிறுத்தி வைக்கப்பட்டால் சுமார் 50கோடி ருபாய் வரை இழப்பு ஏற்படும் என HAL வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.