
மத்திய ஆயுத காவல் படைகளில் (சிஏபிஎஃப்) துணை ஆய்வாளர்கள் மற்றும் கான்ஸ்டபிள்களுக்கான நேரடி ஆட்சேர்ப்பு தேர்வுகளில் என்சிசி சான்றிதழ் வைத்திருப்பவர்கள் போனஸ் மதிப்பெண்கள் பெறுவார்கள் என்று உள்துறை அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
என்.சி.சி சான்றிதழ் பெற்றவர்களை அந்தந்த மாநில காவல் படையினருக்கான நேரடி நுழைவுத் தேர்வில் ஊக்குவிக்குமாறு அனைத்து மாநில அரசுகளையும் கேட்கவும் மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
என்.சி.சி ‘சி’ சான்றிதழ் வைத்திருப்பவர்களுக்கு மொத்த எண்ணிக்கையில் கூடுதலாக 5 சதவீதம் கிடைக்கும், ‘பி’ மற்றும் ‘ஏ’ சான்றிதழ் வைத்திருப்பவர்களுக்கான போனஸ் மதிப்பெண்கள் முறையே 3 சதவீதம் மற்றும் 2 சதவீதமாக இருக்கும்.
துணை ராணுவ படைகளுக்கான ஆட்சேர்ப்பில் என்.சி.சி ‘ஏ’ சான்றிதழ் வைத்திருப்பவர்களுக்கு போனஸ் மதிப்பெண்கள் வழங்கும் இந்த திட்டம், சப் இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிள்(GD) பதவிகளுக்கான வரவிருக்கும் நேரடி ஆட்சேர்ப்பு தேர்வுகளில் இருந்து நடைமுறைக்கு வரும்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையில் “என்.சி.சி சான்றிதழ் வைத்திருப்பவர்களை ஊக்குவிக்கும் அந்தந்த மாநில காவல் படையினருக்கான நேரடி ஆட்சேர்ப்பு தேர்வில் போனஸ் மதிப்பெண்கள் வழங்க இதே போன்ற ஏற்பாடுகளை செய்யுமாறு அனைத்து மாநில அரசுகளையும் இந்திய அரசு கேட்டுக்கொள்ளும் என்றும்,
இந்த முடிவு இளைஞர்களை என்.சி.சி-யில் சேர ஊக்குவிப்பது மட்டுமல்லாமல், பயிற்சியளிக்கப்பட்ட மற்றும் ஒழுக்கமான இளைஞர்கள் துணை ராணுவ படைகளுக்கு கிடைப்பதை உறுதி செய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது.