நியூக்ளியர் சப்ளையர் க்ரூப்பில் இணைய இந்தியாவிற்கு பிரான்ஸ் மீண்டும் ஆதரவு

  • Tamil Defense
  • March 3, 2020
  • Comments Off on நியூக்ளியர் சப்ளையர் க்ரூப்பில் இணைய இந்தியாவிற்கு பிரான்ஸ் மீண்டும் ஆதரவு

அணுசக்தி வழங்கு குழுமத்தில் இணைய இந்தியாவிற்கு பிரான்ஸ் மீண்டும் தனது ஆதரவு கரத்தை நீட்டியுள்ளது.இந்தியா-பிரான்ஸ் நடத்திய கூட்டு கூட்டத்தில் இதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.

இந்தியாவுடனான எங்கள் ஆதரவை நிரூபிக்க மற்றுமொரு சந்தர்ப்பமாக இந்த பிரச்சனையை காண்கிறோம் என பிரான்ஸ் சார்பில் ஒரு அதிகாரி தெரிவித்துள்ளார்.

அணுஆயுத பரவலை தடுக்க ஏற்பட்ட அமைப்பு தான் என்எஸ்ஜி எனப்படும் அமைப்பு.இந்த குழுமத்தில் இணைய இந்தியா பல்வேறு முயற்சிகள் எடுத்துவரும் நேரத்தில் சீனா இதற்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறது.மற்ற அனைத்து உறுப்பினர் நாடுகளும் இந்தியாவிற்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளனர்.இந்த என்எஸ்ஜியை தவிர்த்து மற்ற குழுக்களான ஆஸ்திரேலியா க்ரூப்,ஏவுமணை ஏற்றுமதி கட்டுப்படுத்தி அமைப்பு மற்றும் வாசேனார் அரேஞ்மென்ட் போன்ற குழுக்களில் இந்தியா உள்ளது.

இந்தியா-பிரான்ஸ் இடையோன அதிகாரிகள் பேச்சுவார்த்தையின் போது இந்தியாவிற்கு இந்த என்எஸ்ஜியில் இணைய பிரான்ஸ் தனது ஆதரவினை தெரிவித்தது.

இந்த கூட்டு கூட்டத்தின் அடுத்த பேச்சுவார்த்தை 2021ல் பாரிசில் நடைபெற உள்ளது.