ஒரு பறக்கும் வெடிமருந்து ஆயுத அமைப்பு சிறிய ஆளில்லா விமானம் போன்றது, ஆனால் அவை வெடிகுண்டு ஸஏந்தி பறக்கும் ஆயுதமாக செயல்படுகின்றன. தரை கட்டுப்பாட்டாளர் முலம் அதை கண்காணிப்புக்காக பறக்கவிடலாம் பின்னர்
தற்கொலை முறையில் அதனை கொண்டு
இலக்கை நோக்கிச் செலுத்தி தாக்கலாம்.
இது ஏவுகணைகளுக்கு மலிவான மாற்றாகும், இருப்பினும் அழிவு சக்தி குறைவாக இருப்பதால் சிறிய மற்றும் மென் கவச இலக்குகளுக்கு எதிராக மட்டுமே இது பயன்படுத்தப்படுகிறது.
இந்திய இராணுவத்திற்காக 100 பறக்கும் வெடிமருந்து ஆயுத அமைப்புகளை வாங்குவதற்கான சாத்தியக்கூறு குறித்து இந்திய பாதுகாப்பு அமைச்சகம் (MOD) தகவல் கோரிக்கையை (RFI) வெளியிட்டுள்ளது.
இந்த தகவல் கோரிக்கையில் குறிப்பிட்டுள்ள வெடிமருந்து அமைப்பு 20 கிலோவுக்கும் குறைவான எடையுள்ளதாகவும், மனிதனால் சுமந்து செல்லக்கூடியதாகவும், 15 கிலோமீட்டர் தாக்குதல் வரம்புடனும்,
கடல் மட்டத்திலிருந்து குறைந்தபட்சம் 4,500 மீட்டர் உயரத்திற்கு
குறைந்தது 30 நிமிடங்கள் பறக்ககூடியதாகவும், Anti-Jamming அமைப்புடனும், மென் இலக்குகள் மற்றும் காலாட்படைக்கு எதிராக பயன்படுத்தப்படும் வகையிலும் இருத்தல் வேண்டும். தரை கட்டுப்பாட்டு நிலையம் ஹெலிகாப்டர்கள் மூலம் நடவடிக்கைகளுக்கு அனுப்பப்படும் வகையிலும், துருப்புக்களால் கொண்டு செல்லக்கூடிய வகையிலும் அளவில் சிறியதாக இருக்க வேண்டும் எனவும் கூறப்படுகிறது.
மேலும் ஒப்பந்தம் கையெழுத்திட்ட காலத்திலிருந்து 18 மாதங்களுக்குள் முழு ஆர்டரையும் வழங்குமாறு RFI குறிப்பிடுகிறது.
பறக்கும் வெடிமருந்து ஆயுத அமைப்புகளைத் வாங்குவதில் இந்தியா ஆர்வமாக உள்ளது, மேலும் யுவிஷன் போன்ற இஸ்ரேலிய நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை வழங்குவதையும், இந்திய ஆயுதப் படைகளுக்கு சாத்தியமான விநியோகத்திற்காக உள்ளூர் நிறுவனங்களுடன் கூட்டு சேருவதையும் வரவேற்கும் நிலையில் உள்ளது. ஆகவே இஸ்ரேல் இந்த ஒப்பந்தத்தை பெறும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.