மே கடைசியில் இந்தியா வரும் முதல் நான்கு ரபேல் விமானங்கள்:அமைச்சர் இராஜ்நாத் உறுதி

  • Tamil Defense
  • March 9, 2020
  • Comments Off on மே கடைசியில் இந்தியா வரும் முதல் நான்கு ரபேல் விமானங்கள்:அமைச்சர் இராஜ்நாத் உறுதி

முதல் நான்கு ரபேல் விமானங்கள் வரும் மே இறுதியில் இந்தியா வரும் நிலையில் அடுத்த 45 நாட்கள் இடைவெளியில் அடுத்தடுத்து ரபேல் விமானங்கள் இந்தியா வரும் என அமைச்சர் கூறியுள்ளார்.இப்போதைக்கு இந்த 36 விமானங்களே நமது எதிரிகளுக்கு போதுமானது என அவர் கூறியுள்ளார்.

தற்போது சீனா உடனான உறவு அதிகரித்து வரும் வேளையில் எல்லையில் எந்த பிரச்சனையும் இல்லை என அவர் கூறியுள்ளார்.

இதுதவிர ஏற்றுமதி குறித்து பேசுகையில் தனியார் நிறுவனங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.அவர் ஏற்றுமதிக்கான நிலைகளை ஆராய வேண்டும் என தெரிவித்துள்ளார்.இதற்காக அரசு தனியார் நிறுவனங்களை ஊக்கமூட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.