கொரோனாவுக்கு எதிரான போரில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) !!
1 min read

கொரோனாவுக்கு எதிரான போரில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) !!

இந்த நிறுவனம் ஏற்கனவே ஒரு வென்டிலேட்டரை உருவாக்கி உள்ளது, தொழிற்துறையுடன் தற்போது இணைந்து நாள் ஒன்றுக்கு 5000 வென்டிலேட்டர்களை தயாரிக்க முயற்சி செய்து வருகிறது,இதன் தயாரிப்பு திறன் சிறிது நாட்களில் நாள் ஒன்றுக்கு 10,000 ஆக அதிகரிக்கப்படும்.

மேலும் DRDO 20,000 லிட்டர்கள் அளவுக்கு சானிட்டைஸர் (sanitiser) தயாரித்துள்ளது. இதனை பல்வேறு அமைப்புகளுக்கு வழங்கியுள்ளோம் அதில் குறிப்பாக தில்லி போலீஸாருக்கு 10,000 லிட்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளது எனவும் சில தனியார் நிறுவனங்களுடன் இணைந்து தனி மனித பாதுகாப்பு சாரந்த உடைகளை தயாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என DRDO தலைவர் டாக்டர் திரு சதிஷ் ரெட்டி கூறினார்.

அவர் மேலும் கூறுகையில் “நாங்கள் 5 Layer பாதுகாப்பு கொண்ட N99 ரக முகமூடியை தயாரித்துள்ளோம் மேலும் ராணுவத்தினர் போர்க்களத்தில் பயன்படுத்தும் சாப்பிட தயாராக உள்ள உணவு பொருட்களை தயாரித்து துப்புரவு பணியாளர்களுக்கு கொடுக்க முயற்சி செய்து வருகிறோம் என்றார்.

உணவு பொருட்களை மைசூர் பிரிவு தயாரிக்கும் அதே நேரத்தில் ஆயுத தொழிற்சாலைகள் சானிட்டைஸர், முகமூடிகள் மற்றும் பாதுகாப்பு உடைகள் தயாரிப்பை விரைவுப்படுத்தி உள்ளன.