சுதேசி தகவல் தொடர்பு மற்றும் நுண்ணறிவு அமைப்பின் சோதனை வெற்றி !!
“நயன்” என பெயரிடப்பட்டுள்ள COMINT அமைப்பு ஐ.என்.எஸ் தல்வார் ஃப்ரிகேட் கப்பலில் பொருத்தப்பட்டு சோதனைகளை நிறைவு செய்தது.
நயன் என்பது VHF மற்றும் UHF அதிர்வெண் வரம்பில் உள்ள தகவல் தொடர்பு நுண்ணறிவு (COMINT) அமைப்பு. இது VHF மற்றும் UHF வரம்பில் உள்ள தரவு பரிமாற்றங்களை இடைமறிப்பதன் மூலம் மூலோபாய மற்றும் தந்திரோபாய தகவல்களை வழங்க உதவுகிறது. மேலும் VHF மற்றும் UHF அதிர்வலை வரம்பில் தேடல், கையகப்படுத்தல், கண்காணிப்பு, பகுப்பாய்வு மற்றும் தகவல் தொடர்பு சமிக்ஞைகளின் டிஜிட்டல் பதிவு ஆகியவற்றை செய்கிறது. நிகழ்நேர சூழலை கணிப்பதற்கான COMINT தகவல்களை சேகரிக்க, செயலாக்க மற்றும் தயாரிக்க வடிவமைக்கப்பட்ட அதிநவீன DF ஸ்கேன்னர் மற்றும் DF ரிசீவர் ஆகியவை இணைக்கப்பட்டுள்ளது.
இதன் சிறப்பம்சங்கள்:
VHF / UHF பரந்த அலைகற்றை ரிசீவர்.
ஸ்கேனிங், இடைமறிப்பு, பகுப்பாய்வு மற்றும் திசை கண்டுபிடிப்பு.
ஒரே நேரத்தில் சேனல்களின் பதிவு மற்றும் பதிவை Play செய்யவும் இயலும்.
AM, FM, CW, LSB, USB, FSK மற்றும் PSK ஆகிய அலைகற்றைகளை ஆதரிக்கிறது.
அதிவேக தேடல்.
FH டிரான்ஸ்மிஷனின் இடைமறிப்பு.
டிஜிட்டல் பரிமாற்றங்களின் பகுப்பாய்வு.
தரவு நீக்கம் மற்றும் சமிக்ஞை வகைப்பாட்டின் திறன்.
வேகமான நிறமாலை தேடல், உளவு மற்றும் நிகழ்நேர துல்லியமான திசை கண்டுபிடிப்பிற்கான துணை அமைப்பைக் கண்டுபிடிக்கும் ஐந்து திசை சேனல் ஸ்கேன் வசதி.
தகவல்தொடர்பு சமிக்ஞையின் பகுப்பாய்வு, கண்காணிப்பு மற்றும் பதிவு செய்வதற்கான இரண்டு சேனல் கண்காணிப்பு மற்றும் பகுப்பாய்வு துணை அமைப்பு.