Breaking News

வீரர்களின் உயிரிழப்பை தடுக்க வானூர்திகளை ஆம்புலன்சாக மாற்றும் சிஆர்பிஎப்

  • Tamil Defense
  • March 4, 2020
  • Comments Off on வீரர்களின் உயிரிழப்பை தடுக்க வானூர்திகளை ஆம்புலன்சாக மாற்றும் சிஆர்பிஎப்

நாட்டின் நக்சல் பாதித்த பகுதியில் இயங்கும் 12 வானூர்திகளை ஆம்புலன்சான மாற்ற உள்ளது சிஆர்பிஎப்.வீரர்களின் உயிரிழப்பை தடுக்க இந்த முடிவை சிஆர்பிஎப் எடுத்துள்ளது.
இதற்காக வானூர்திகளை ஆப்டேட் செய்துவருகிறது சிஆர்பிஎப்.

மருத்துவர்கள் மற்றும் மெடிக்கல் குழுக்களோடு இயங்குமளவுக்கு வானூர்தி மாற்றப்படும்.காயம்படும் வீரர்களை உடனடியாக மீட்டு முதற்கட்ட மருத்துவ உதவிகள் வழங்கவே இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்கு முன் காயம்பட்ட வீரர்களை மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு செல்லும் முன்னரே முக்கிய நிமிடங்களை இழந்துவிடுகிறோம்.இதனால் வீரர்களின் உயிரிழப்பு தடுக்க முடியாததாய் ஆகிறது.இதை குறைக்கவே வானூர்தியிலேயே முதலுதவி வழங்க இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

விமானப்படை மற்றும் எல்லைப் பாதுகாப்பு படையிடம் இருந்து பெற்ற 12 வானூர்திகள் இதற்காக மாற்றப்பட்டு வருகின்றன.

தேவையான அடிப்படை மருத்துவ உபகரணங்கள் இந்த வானூர்தியில் இணைக்கப்படும்.நக்சல் எதிர்ப்பு வேட்டையில் ஈடுபடும் வீரர்களுக்காகவே இந்த வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

ஜக்தல்பூர் மற்றும் ராய்ப்பூர் ஆகிய இடங்களிலும் ஜார்க்கண்டின் ராஞ்சியிலும் இந்த வானூர்திகள் தனது செயல்பாட்டை தொடங்கும்.