புதிய துப்பாகிகளை பெற்றுள்ள மத்திய ரிசர்வ் காவல்படை !!

  • Tamil Defense
  • March 19, 2020
  • Comments Off on புதிய துப்பாகிகளை பெற்றுள்ள மத்திய ரிசர்வ் காவல்படை !!

திருச்சிராப்பள்ளி ஆயுத தொழிற்சாலை (OFT) உருவாக்கிய 500 திருச்சி தாக்குதல் துப்பாக்கிகளின் (TAR) முதல் தொகுதி வியாழக்கிழமை மத்திய ரிசர்வ் போலீஸ் படையிடம் (சிஆர்பிஎஃப்) ஒப்படைக்கப்பட்டது.

மொத்தம் 6,167 தாக்குதல் துப்பாக்கிகளை சிஆர்பிஎஃப் வாங்க உள்ளதாக
OFT வட்டாரங்கள் தெரிவித்தன. விரிவான கள சோதனைகளுக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 2017 இல், ஹரியானாவின் கடர்பூரில் உள்ள சிஆர்பிஎஃப் அகாடமியில் மதிப்பீட்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆயுதத்தின் செயல்பாடு, துல்லியம் மற்றும் நம்பகத்தன்மை ஆகியவை சோதிக்கப்பட்டன.
இந்த சோதனைகளில் மொத்தமாக 15,000 சுற்றுகள் சுடப்பட்டன. துப்பாக்கி எந்த ஒரு நிறுத்தமும் இல்லாமல் சுட்டது, இது ஆயுதத்தின் நம்பகத்தன்மையை நிரூபிக்கிறது.

சத்தீஸ்கர் காவல்துறை, இந்தோ திபெத் காவல்படை, எல்லை காவல் படை மற்றும் மத்திய தொழிற்காவல் படை போன்ற மத்திய ஆயுத காவல் படைகளுக்கு 10,000 க்கும் மேற்பட்ட துப்பாக்கிகளை OFT தயாரித்து அனுப்பியுள்ளது.
TAR என்பது AK 47 இன் சுதேசி பதிப்பாகும்.

“கடந்த 12-13 ஆண்டுகளில் நாங்கள் பல ஆயுதங்களை உருவாக்கியுள்ளோம், ஆனால் திருச்சி தாக்குதல் துப்பாக்கி எங்கள் மிகப்பெரிய வெற்றிகரமான ஆயுதம்” என்று OFTஇன் பொது மேலாளர் ஷிரிஷ் கரே கூறினார்.