பிரதமரின் நிவாரண நிதிக்கு தங்கள் ஒரு நாள் ஊதியத்தை வழங்கிய மத்திய ரிசர்வ் படை

  • Tamil Defense
  • March 27, 2020
  • Comments Off on பிரதமரின் நிவாரண நிதிக்கு தங்கள் ஒரு நாள் ஊதியத்தை வழங்கிய மத்திய ரிசர்வ் படை

நாடு முழுவதும் கொரானா தொற்று வேகமாக பரவி வருகிறது.அத்தோடு பொருளாதார நிலையும் மந்தமாக உள்ள நிலையில் இந்த கொரானா தொற்றை சமாளிக்க பல்வேறு நபர்களும் பிரதமரின் நிவாரண நிதிக்கு தங்களால் இயன்ற நிதி உதவியை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய ஆயுதம் தாங்கிய படைப்பிரிவுகளுள் ஒரு படையும், இந்தியாவின் அமைதி காவலர்களுமான மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் அதிகாரிகள் தங்கள் ஒரு நாள் ஊதியத்தை பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர்.

33 கோடியே 81 லட்சத்துக்கான காசோலை பிரதமரின் நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டுள்ளது.சம்பளத்திற்காக தானே வேலை செய்கிறார்கள் இல்லையென்றால் வேலை செய்வார்களை என்பவர்களின் எண்ணங்களுக்கு பதிலடி தரும் வகையில் இந்த சம்பவம் அமைந்துள்ளது.

பணத்துக்காக அல்ல தேசத்திற்காகவே எங்கள் உயிர் என்பது அமைதிக் காவலர்கள் மீண்டும் ஒருமுறை நிரூபித்து அதை பற்றி பெருமை கொள்ளாமல் நாட்டில் மற்றும்
அல்ல உலகில் பல்வேறு பகுதிகளின் தங்களது அமைதி காக்கும் பணிகளை செய்து வருகின்றனர்

கோடிக்கணக்கில் பணம் வைத்திருப்பவர்கள் பார்த்துக்கொண்டிருக்க தங்கள் மாதாந்தில் சம்பளத்தை மனிதாபிமானம் ஓங்க இந்த செயலை சற்றும் தயங்காமல் செய்துள்ளனர்.

உண்மையான காவல் தெய்வங்களுக்கு எங்களது வணக்கத்தை காணிக்கையாக்குகிறோம்.