
கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளும் முப்படை குழவின் முதன்மை அதிகாரியான பிரகேடியர் அனுபம் ஷர்மா கூறும்போது “தேவை ஏற்படும் பட்சத்தில் முப்படைகளும் போர்க்கால வேகத்தில் தங்களது முழு சக்தியையும் பயன்படுத்தி அரசு நிர்வாகம் மற்றும் நாட்டு மக்களுக்கு உறுதுணையாக நிற்க தயார் நிலையில் உள்ளோம்” என்றார்.
மேலும் அவர் கூறும்போது இந்திய தரைப்படையானது ஜோத்பூர், ஜான்சி, மானெசர், ஜெய்சால்மர், தியோலாலி, கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட இடங்களிலும் இந்திய கடற்படை மும்பையில் இரு இடங்கள் மற்றும் முறையே கொச்சி மற்றும் விசாகப்பட்டினத்தில் 1 மையங்கள் விதம் 4 மையங்களையும் இந்திய விமானப்படை கோரக்பூர்,கான்புர்,ஜோர்ஹாட், டுண்டிகல், பெங்களூர், தில்லி ஹிண்டன் ஆகிய நகரங்களிலும் மருத்துவ மையங்களை அமைத்துள்ளன.
இந்த மருத்துவ மையங்கள் அனைத்தும் அதிநவீன மருத்துவ உபகரணங்கள் மற்றும் உயர்ரக மருத்துவ வசதிகள் கொண்டவை.
இவை தில்லியில் அமைந்துள்ள ராணுவத்தின் RESEARCH & REFERRAL மருத்துவமனைக்கு நிகரானவை, இங்கு தான் நமது குடியரசு தலைவர் ஏதேனும் உடல் உபாதைகள் வந்தால் ராணுவ மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள இந்த மையங்களை குறுகிய காலத்திற்குள் பாதுகாப்பு படைகள் அமைத்துள்ளன, இந்த மையங்களில் சுமார் 7000பேருக்கு சிகிச்சை அளிக்கமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் எங்களது மருத்துவர்கள் மிகுந்த பயிற்சி பெற்றவர்கள அவர்களுக்கு உலகம் முழுவதும் பணிபுரிந்து அனுபவம் மிக்கவர்கள். மேலும் இதுபோன்ற கொடிய நோய்களை புத்திசாலிதனமாக கையாள பயிற்றுவிக்கப்பட்டிருக்க்கின்றனர். இதை தவிர்த்து நாடு முழுவதும் அமைந்துள்ள பல ராணுவ மருத்துவமனைகள் ஏற்கனவே தயார்படுத்தி வைக்கப்பட்டுள்ளன. மத்திய மாநில அரசுகள் கோரிக்கை வைத்தால் முப்படைகளும் களமிறங்கும் என்றார்