
21 நாட்களுக்கு நாடு முடக்கப்படும் என சில மணி நேரம் முன்பு பிரதமர் அவர்கள் அறிவித்துள்ளார்.
இது பற்றிய மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையில், அத்தியாவசிய தேவை சார்ந்த கடைகள் (காய்கறிகள், பால், இறைச்சி, மீன்) , எரிபொருள் நிலையங்கள், எரிவாயு சேவைகள் ஆகியவை வழக்கம் போல இயங்கும் எனவும் தற்போது நாட்டிற்கு இன்றியமையாத மருத்துவதுறை தொடர்ந்து இயங்கும் எனவும் அறிவிக்க பட்டுள்ளது.
அதே நேரத்தில் அரசு உத்தரவை மீறினால் இ.பி.கோ 188இன் படி ஒரு மாதம் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்.
மேலும் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் 51 முதல் 60ஆவது பிரிவு வரையான சட்டங்களின் படி சுமார் ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை வழங்க முடியும்.
மேலும் விரிவான தகவல்களுக்கு இணைக்கப்பட்டுள்ள படங்களை பாருங்கள்