
கொரானா தொற்று காரணமாக மதுரையில் சிகிச்சை பெற்று வந்த நபர் உயிரிழந்துள்ளதார்.இதன் மூலம் கொரானா தொற்று காரணமாக முதல் உயிரிழப்பு தமிழகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உலக முழுதும் கொரானா பாதிப்பு அதிதீவிரமாக உள்ளது.இத்தாலி,இங்கிலாந்து போன்ற நாடுகள் கடுமையாக தற்போது பாதிக்கப்பட்டுள்ளன.இந்தியாவிலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.தமிழகத்திலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18ஆக உயர்ந்துள்ளது.
இந்தியா முழுதும் அடுத்த 21 நாட்களுக்கு கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.