இந்தியாவில் ஒரே நாளில் 99 பேருக்கு பாதிப்பு : இரண்டு பேர் உயிரிழப்பு-மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 500ஐ தொடுகிறது

  • Tamil Defense
  • March 24, 2020
  • Comments Off on இந்தியாவில் ஒரே நாளில் 99 பேருக்கு பாதிப்பு : இரண்டு பேர் உயிரிழப்பு-மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 500ஐ தொடுகிறது

கோவிட்-19 பாதிப்பு நாட்டில் அதிகரித்து வரும் வேளையில் தற்போது 99 புதிய கொரானா பாதிக்கப்பட்ட நபர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.ஒரே நாளில் இத்தனை பேருக்கு வந்துள்ளது இதுவே முதல் முறை.மேலும் கொரானா பாதிக்கப்பட்ட இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.இத்தோடு இந்த பாதிப்பால் உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் இந்தியாவில் கொரானா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 498 ஆக உள்ளது.
இதில் 40 பேர் வெளிநாட்டவர்கள்.

மற்றொரு பக்கமாக 35 தொற்று உள்ள நபர்கள் குணப்படுத்தப்பட்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனா்.

கொரானா பரவுதலை தடுக்கவே தான் சுய தனிமைப்படுத்ததுல் மற்றும் அனைத்து இடங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளன.