கொரானா இன்றைய நிலை: 20 பேர் உயிரிழப்பு; மொத்த பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 700ஐ தாண்டியது

  • Tamil Defense
  • March 27, 2020
  • Comments Off on கொரானா இன்றைய நிலை: 20 பேர் உயிரிழப்பு; மொத்த பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 700ஐ தாண்டியது

ஒரே நாளில் நேற்று கொரானா தொற்றுக்கு ஏழு பேர் நாடு முழுதும் உயிரிழந்துள்ளனர்.ஒரே நாளில் ஏழு பேர் உயிரிப்பது இதுவே முதல் முறை.இதன் மூலம் இந்தியாவில் மொத்த உயிரிழப்பு 20ஆக உள்ளது.தவிர புதிதாக 88 பேருக்கு கொரானா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன் மூலம் இந்தியாவில் கொரானா தொற்று உள்ள நபர்களின் எண்ணிக்கை 727 ஆக உள்ளது.

உயிரிழந்தவர்களில் பெரும்பான்மையானோர் வயது முதிந்தவர்களாக உள்ளனர்.காஷ்மீரில் 65 வயது முதியவரும்,இராஜஸ்தானில் 75வயது முதியவரும் வியாழன் அன்று உயிரிழந்துள்ளனர்.

மத்திய பிரதேசத்தில் ஒரு 35 வயது நபர் உயிரிழந்துள்ளார்.அதன் பின்பு 65வயது பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.இவர்களுக்கு உடலில் வேறு சில உபாதைகளும் இருந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

குஜராத்தில் 70வயது முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.கேராளாவில் அதிகபட்ச கொரானா தொற்று உள்ளதாக கூறப்பட்டுள்ளது.அங்கு 137 பேருக்கு கொரானா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.