இந்திய பெருங்கடலில் சீனாவின் ஆளில்லா நீர்மூழ்கிகள் !!

ஃபோர்ப்ஸ் பத்திரமாக சமீபத்தில் வெளியிட்ட செய்தி ஒன்றில் சீனா தனது “ஸீயாங்யாங்கோங் 06” என்ற கப்பலில் இருந்து ஏறத்தாழ 12 “ஸீ வீங்” ரக நீர்மூழ்கி ட்ரோன்களை கடந்த டிசம்பர் மாதம் இந்திய பெருங்கடலில் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுப்பியதாகவும் தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும் இந்த ட்ரோன்கள் தொலை தூரம் செல்லக்கூடியவை என்றும் அவற்றால் ஒரு மாதம் வரை இயங்க முடியும் எனவும் இவற்றை வைத்து சுமார் 3,400 கண்காணிப்புகளை மேற்கொண்டதாகவும் கூறுகிறது.

சீனாவின் கூற்றுப்படி இது போன்ற செயல்கள் கடல்சார் மற்றும் சூழலியல் குறித்த ஆராய்ச்சி பணி என்கிறது. ஆனால் அதை தாண்டிய நோக்கம் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

ஏனெனில், இத்தகயை ட்ரோன்களை வைத்து கடலடியில் உள்ள நீரோட்டம், பள்ளத்தாக்குகள், மலைகள், கணவாய்கள் போன்றவற்றை அறிந்து கொண்டு அதை வைத்து நீர்மூழ்கி கப்பல்களை துல்லியமாக இயக்க முடியும், ஆகவே இது பிரச்சினை தான்.

இந்திய கடற்படை வட்டாரங்கள் “இந்த செய்தியின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய முடியவில்லை” என கூறுகின்றனர்.

மேலும் இந்திய கடற்படை தொடர்ந்து சீன கப்பல்களின் நடமாட்டத்தை மிகவும் உன்னிப்பாக கண்காணித்து வருவதாக கூறுகிறது.