சீனக் கப்பல் பாக்கிற்கு அணுஏவுகணை சம்பந்தமான பொருள்களை தான் கடத்தியுள்ளது-டிஆர்டிஓ உறுதி

  • Tamil Defense
  • March 6, 2020
  • Comments Off on சீனக் கப்பல் பாக்கிற்கு அணுஏவுகணை சம்பந்தமான பொருள்களை தான் கடத்தியுள்ளது-டிஆர்டிஓ உறுதி

கடந்த பிப்ரவரி 3 அன்று பாக் நோக்கி சென்றுகொண்டிருந்த ஒரு சீனக் கப்பலை குஜராத்தின் கன்ட்லா துறைமுகத்தில் இந்திய கஸ்டம்ஸ் அதிகாரிகள் கைப்பற்றினர்.இதை ஆராய்ந்த அதிகாரிகளுக்கு அடுத்து அடுத்து அதிர்ச்சியான தகவல்கள் கிடைத்துள்ளன.

இதன் மூலம் சீனக் கப்பலான டாகியுன் கப்பலில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆட்டோகிளேவ் தொலைதூரம் செல்லும் பலிஸ்டிக் ஏவுகணை தயாரிக்க பயன்படுத்தப்படுவது என இந்தியாவின் டிஆர்டிஓ உறுதிபடுத்தியுள்ளது.

 தொலை தூர ஏவுகணை லாஞ்சரை தயாரிக்க இந்த ஆட்டோகிளேவ் உபயோகப்படும் என டிஆர்டிஓ உறுதிபட தெரிவித்துள்ளது.1500கிமீ அல்லது அதற்கு மேல் செல்லும் ஏவுகணைகளில் இந்த அமைப்பு பயன்படுத்தபடும்.தற்போது பாக்கின் சஹீன் 2 ஏவுகணை 1500-2000கிமீ வரை செல்லக்கூடியது.

இந்திய உளவுத் துறையின் அறிவுறுத்தலின்கீழ் இந்த கப்பல் கடந்த பிப்ரவரி 3 அன்று கைப்பற்றப்பட்டது.பாக்கின் கராச்சி நோக்கி இந்தக் கப்பல் சென்று கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.