
பாராமிலிட்டரி காவல் துறையில் முதல் கோரானா தொற்றாக எல்லைப் பாதுகாப்பு படை வீரர் மற்றும் மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர் ஒருவருக்கும் கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குவாலியரின் தெகன்பூர் பகுதியில் பணியில் இருந்த 57 வயதான் இரண்டாம் கட்டளை அதிகாரி தரத்திலான எல்லைப் பாதுகாப்பு படை வீரருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இங்கிலாந்தில் இருந்து வீடு திரும்பிய வீரரின் உறவினர் மூலம் வீரருக்கு பரவியுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.
குடும்ப உறுப்பினர்களை தவிர இந்த வீரருடன் தொடர்பில் இருந்த 24க்கும் மேற்பட்ட வீரர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர் ஒருவருக்கும் கொரானா தொற்று இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.மும்பை சர்வதேச விமான நிலையத்தில் இவர் பணியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரானாவிற்கான அறிகுறிகள் தென்பட்ட உடன் இந்த வீரர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.அங்கு அவருக்கு கொரானா உறுதி செய்யப்பட்டது.
விமான நிலையப் பணிகளின் போது அவருக்கு கொரானா தொற்று ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.