
இந்திய தரைப்படையில் கர்னலாக பதவி வகிக்கும் ராணுவ மருத்துவர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர் தற்போது கொல்கத்தாவில் உள்ள தரைப்படை கட்டளையக மருத்துவமனையில் தனிமைப்படுத்தல் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் உத்தராகண்ட் மாநிலம் டேராடுனை சேர்ந்த தரைப்படை வீரர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரும் தற்போது சிகிச்சையில் உள்ளார்.
இவர்கள் இருவரும் வெளிநாடு பயணம் மேற்கொள்ளவில்லை மாறாக இவர்கள் தில்லிக்கு சென்றுள்ளது மட்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.