பிரங்கியை சரி செய்யும் போது நிகழ்ந்த விபத்தில் ராணுவ வீரர் மரணம் !!

  • Tamil Defense
  • March 30, 2020
  • Comments Off on பிரங்கியை சரி செய்யும் போது நிகழ்ந்த விபத்தில் ராணுவ வீரர் மரணம் !!

கடந்த சனிக்கிழமை அன்று மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் அமைந்துள்ள 506ஆவது தரைப்படை தள பணிமனையில் (506 ARMY BASE WORKSHOP) பிரங்கிகளை சரிபார்க்கும் பணியை ராணுவ வீரர்கள் மேற்கொண்டு இருந்தனர். அப்போது தீடிரென நைட்ரஜன் வாயு நிரம்பிய உருளை ஒன்று வெடித்ததில் கலுராம் குர்ஜார் என்ற ராணுவ வீரர் மரணமடைந்தார். அவருடன் பணியாற்றிய மற்ற மூன்று வீரர்களும் பலத்த காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த 506ஆவது தள பணிமனை பிரங்கிகளை பழுது பார்த்தல் மற்றும் புதுப்பித்தல் ஆகிய பணிகளை மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.