இனி தளவாட தேவையை எளிதில் நிறைவேற்றலாம்; ஆனால் வாங்கப்போவதில்லை எப்படி ?

  • Tamil Defense
  • March 31, 2020
  • Comments Off on இனி தளவாட தேவையை எளிதில் நிறைவேற்றலாம்; ஆனால் வாங்கப்போவதில்லை எப்படி ?

குத்தகை ஏன் நல்லது , எதனால் ஏர்பஸ் போட்டியில் முன்னால் உள்ளது ??

சமீபத்தில் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள 2020ஆம் ஆண்டுக்கான பாதுகாப்பு கொள்முதல் கொள்கை வரைவில் முப்படைகளும் தங்களது ஆயுத தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள குத்தகை முறையை பின்பற்றலாம் என அனுமதி அளித்துள்ளது.

இந்திய விமானப்படை நீண்ட காலமாக எரிபொருள் டேங்கர் விமானங்களை வாங்க முயற்சித்து வருகிறது.ஆனால் அதிக செலவு காரணமாக பல ஆண்டுகளாக தள்ளிப்போட்டபடி உள்ளது.

இதனால் குத்தகை தற்போது கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் நமது தேவையை குறைந்த பொருட்செலவில் பூர்த்தி செய்து கொள்ள முடியும்.

இந்திய விமானப்படை ஏர்பஸ் நிறுவனத்தின் ஏ330 பல்உபயோக டேங்கர் போக்குவரத்து விமானத்தின் (A330 Multi Role Tanker Transport – MRTT) மீது அதிக ஆர்வம் காட்டுகிறது. இரண்டு முறை இந்த விமானத்தை தேர்வு செய்தும் நிதியமைச்சகம் அதிக விலையை காரணம் காட்டி பணம் தர மறுத்து விட்டது.

தற்போது ஏர்பஸ் நிறுவனமும் குத்தகை முறையில் ஒரு சிறப்பம்சத்தை சேர்த்து இங்கிலாந்து இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு விமானத்தை தர விரும்புகிறது. அதன்படி விமானத்தை 15 முதல் 30 வருடகால குத்தகை அடிப்படையிலும் போர்க்காலங்களில் பேருதவியாக அமையும் வகையில் கூடுதல் விமானங்களையும் அந்நிறுவனம் தரும்.

இந்த கூடுதல் விமானங்களை தரும் அம்சத்தை SURGE CAPABILITY என்று சொல்வார்கள். அதாவது நாம் 6 விமானங்களை 30வருடகால குத்தகைக்கு எடுக்கும் போது கூடுதலாக 3 விமானங்களுக்கு (எண்ணிக்கை வேறுபடலாம்) SURGE CAPABILITY அம்சத்தின் கீழ் ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். இனி இந்த 6 விமானங்களை நாம் குத்தகை அடிப்படையில் பெற்று கொண்ட பின்னர் கூடுதல் விமானங்களை ஏர்பஸ் நிறுவனம் தயாரித்து போக்குவரத்து விமானமாக பயன்படுத்தி கொள்ளும் அதன் மூலம் வருவாய் ஈட்டி கொள்ளும். இனி போர்க்காலம் வந்தால் அந்த கூடுதல் விமானங்களை நாம் வரவழைத்து கொள்ளலாம் உடனடியாக அதனை டேங்கராக மாற்றி ஒப்படைத்து விடுவார்கள். இந்த போர்க்காலத்தில் நாம் பயன்படுத்தும் நாட்களுக்கு ஏற்ப பணத்தை அந்நிறுவனத்திற்கு கொடுத்தால் போதுமானது.

ஆகவே தற்போது மீண்டும் இந்திய விமானப்படையின் பார்வை ஏர்பஸ் நிறுவனம் மீது திரும்புகிறது.

இந்த விமானத்தில் இருவகையான எரிபொருள் நிரப்பும் கருவிகளான FLYING BOOM அதாவது வால்பகுதியில் இருந்து ஒரு தடித்த குழாய் போன்ற அமைப்பு வரும் பின்னர் HOSE & DROGUE SYSTEM அதாவது சிறகில் இருந்து பிரியும் நீளமான ஹோஸ் போன்ற அமைப்பு ஆகியவை உள்ளன