
அமெரிக்காவும் ரஷ்யாவும் இந்திய ஆயுதச்சந்தையை கையில் எடுக்க கடுமையான முயற்சிக்ளை மேற்கொண்டுள்ளன, இது தற்போது மோசமான புவிசார் அரசியல் பிரச்சினைகளையும் அது சார்ந்த விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடிய சூழல் தற்போது நிலவுகிறது. கடந்த வாரம் ரஷ்யாவின் மத்திய ராணுவம் மற்றும் தொழில்நுட்ப சேவைகள் கூட்டமைப்பின் தலைவர் ஷூகாயேவ் “இந்தியா ரஷ்யாவிடமிருந்து 400 டி90 எஸ் ரக டாங்கிகளை வாங்க உள்ளதாகவும் கூடுதலாக ஒரு தொகுதி மிக்29 விமானங்களை வாங்க வாய்ப்புள்ளது எனவும் சில குறுந்தூர விமான எதிர்ப்பு ஏவுகணை அமைப்புகளுக்கான ஒப்பந்த்தை இறுதி செய்ய உள்ளதாகவும் கூறியது குறிப்பிடத்தக்கது.
ஷூகாயேவின் இந்த அறிவிப்புக்கு சில வாரங்கள் முன்பு தான் அமெரிக்க அதிபரின் இந்திய சுற்றுப்பயணத்தின் போது 3.5பில்லியன் டாலர்கள் மதிப்புமிக்க இரண்டு உலங்கு வானூர்தி ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா கடந்த 2013-18 காலகட்டத்தில் இந்திய ஆயுதச்சந்தையில் மிகப்பெரிய முன்னேற்றம் கண்டது அதாவது சுமார் 76% சதவிகித அளவுக்கு ஆயுத விற்பனை செய்து வந்த ரஷ்யாவின் பங்கு 58% சதவிகிதம் ஆக குறைந்தது அதே நேரம் அமெரிக்காவின் பங்கு முன்பு இருந்தததை விட சுமார் 569% சதவீதம் அதிகரித்தது.
இப்படி அமெரிக்காவும் ரஷ்யாவும் உலகின் இரண்டாவது மிகப்பெரிய ஆயுதச்சந்தையை கைப்பற்ற மிக கடுமையாக முயற்சி செய்து வருகின்றன. மேலும் இந்தியாவின் நட்பை ஆயுத வியாபாரம் முலம் உரித்தாக்கி கொள்ளவும் இது உதவும். ஆகவே இந்த புவிசார் அரசியல் விளையாட்டு தீவிரமடைகிறது.
ரஷ்யாவின் ஆயுதங்களில் பலம் குறைந்த பகுதிகளை அமெரிக்கா நன்கு பயன்படுத்தி கொண்டது உதாரணமாக கடற்படை ரோந்து விமானங்கள். அதே போல் ரஷ்யாவின் பலம்வாய்ந்த பகுதிகளில் அமெரிக்காவுடனான போட்டி குறைவு தான்.
எனினும் சில புவிசார் அரசியல் ஆய்வாளர்களின் கருத்து படி அமெரிக்காவும் தனது ஆதிக்கத்தை கணிசமான அளவில் இழந்துள்ளதாக கூறுகின்றனர் அதற்கு காரணமாக இந்தியா இஸ்ரேல் ஃபிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் தொடர்பை அதிகப்படுத்திக் கொண்டதும் குறிப்பிடப்படுகிறது. ஆனால் ரஷ்யாவோ தீடிரென சில ஆயுத ஒப்பந்தங்கள் வாயிலாக விட்ட இடத்தை நோக்கி வேகமாக முன்னேறுகிறது.
எஸ்400விவகாரத்தில் அமெரிக்கா இந்தியாவுடன் மிக கடுமையாக முரண்பட்டது நியாபகம் இருக்கலாம், அப்போது இந்தியா மீது பொருளாதார தடைகள் விதிப்பது குறித்த பேச்சுக்கள் அமெரிக்க அரசியல் வட்டாரங்களில் ஒலித்தன.
ஆனால் அப்படி இந்தியா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தால் அது அமெரிக்காவிற்கு பெருத்த நஷ்டமாக அமையும் காரணம் தெற்கு ஆசியாவில் இருந்து அமெரிக்கா முழுவதும் புறகணிக்கப்படும். ரஷ்யா இந்தியா மற்றும் சீனா என ஆசியாவின் மூன்று பெரும் சக்திமிக்க நாடுகள் அமெரிக்க எதிர்ப்பு அரசியல் நிலையை எடுக்கக்கூடும் அப்படி நடந்தால் அது அமெரிக்காவை பாதிப்பதோடு மட்டுமில்லாமல் உலக அரசியலில் பலத்த சலசலப்புகளை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.