சு30எம்.கே.ஐ விமானங்களுக்கு பின்னர் அஸ்திரா ஏவுகணைகளை பெறும் மிக்29 யு.பி.ஜி விமானங்கள் !!

  • Tamil Defense
  • March 27, 2020
  • Comments Off on சு30எம்.கே.ஐ விமானங்களுக்கு பின்னர் அஸ்திரா ஏவுகணைகளை பெறும் மிக்29 யு.பி.ஜி விமானங்கள் !!

இந்திய விமானப்படையின் தலைமையகம் தனது படையில் உள்ள மேம்படுத்தப்பட்ட 60 மிக்29 விமானங்களில் அஸ்திரா மார்க்1 ஏவுகணைகளை பொருத்த முடிவு செய்துள்ளது.

இந்திய விமானப்படை முதல் கட்டமாக சுமார் 100கிலோமீட்டர் தாக்குதல் வரம்புள்ள 50அஸ்திரா மார்க்1 ஏவுகணைகளை வாங்க பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருந்தது. ஆனால் தற்போது ஒரேடியாக 200 அஸ்திரா ஏவுகணைகளை தனது சுகோய்30 மற்றும் மிக்29 விமானங்களுக்காக வாங்க முடிவு செய்துள்ளது. எதிர்காலத்தில் இந்திய விமானப்படையில் உள்ள மற்ற போர் விமானங்களிலும் இந்த ஏவுகணை பொருத்தப்படும் எனத் தெரிகிறது.

2023ஆமா ஆண்டு வாக்கில் இந்திய விமானப்படையில் உள்ள மற்ற விமானங்களான தேஜாஸ் மற்றும் மிராஜ்2000 விமானங்கள் அஸ்திரா ஏவுகணைகளை பெறும். அந்த நேரத்தில் அஸ்திரா ஏவுகணையும் மிகவும் மேம்படுத்தப்பட்டு இருக்கும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த அஸ்திரா ஏவுகணை 3.8மீட்டர் நீளம் கொண்டது. ஒலியை விட நான்கு மடங்கு வேகத்தில் சென்று இலக்கை தாக்கும் ஆற்றல் கொண்டது. இது திட எரிபொருளை பயன்படுத்துகிறது.இதன் மேம்பட்ட வடிவம் ஃபிரெஞ்சு மீட்டியார் ஏவுகணைக்கு ஈடான தாக்குதல் வரம்பை (150கிமீ) கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.