Day: March 30, 2020

ராணுவ அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று !!

March 30, 2020

இந்திய தரைப்படையில் கர்னலாக பதவி வகிக்கும் ராணுவ மருத்துவர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தற்போது கொல்கத்தாவில் உள்ள தரைப்படை கட்டளையக மருத்துவமனையில் தனிமைப்படுத்தல் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் உத்தராகண்ட் மாநிலம் டேராடுனை சேர்ந்த தரைப்படை வீரர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரும் தற்போது சிகிச்சையில் உள்ளார். இவர்கள் இருவரும் வெளிநாடு பயணம் மேற்கொள்ளவில்லை மாறாக இவர்கள் தில்லிக்கு சென்றுள்ளது மட்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Read More

தில்லிக்கு அபாயம் – கொடுர சதித்திட்டம் குறித்து உளவுத்துறை எச்சரிக்கை !!

March 30, 2020

ஞாயிற்றுக்கிழமை அன்று உளவுத்துறைக்கு கிடைத்த தகவல்படி ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் தலைநகர் தில்லியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. அதனடிப்படையில் தில்லி காவல்துறை , பஞ்சாப் மற்றும் மும்பை மாநகர காவல்துறை ஆகியவை உஷார்படுத்தப்பட்டுள்ளன. காஷ்மீரை சேர்ந்த இரண்டு பயங்கரவாதிகள் பல நாட்கள் முன்பே தாக்குதல் நடத்த காஷ்மீரை விட்டு வெளியேறி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை லேசாகவும் எடுக்க முடியாது காரணம் ஐ.எஸ் அமைப்பின் பத்திரிக்கைகளான “அல்-நாபா” மற்றும் “வாய்ஸ் ஆஃப் ஹிந்த்” […]

Read More

பிரங்கியை சரி செய்யும் போது நிகழ்ந்த விபத்தில் ராணுவ வீரர் மரணம் !!

March 30, 2020

கடந்த சனிக்கிழமை அன்று மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் அமைந்துள்ள 506ஆவது தரைப்படை தள பணிமனையில் (506 ARMY BASE WORKSHOP) பிரங்கிகளை சரிபார்க்கும் பணியை ராணுவ வீரர்கள் மேற்கொண்டு இருந்தனர். அப்போது தீடிரென நைட்ரஜன் வாயு நிரம்பிய உருளை ஒன்று வெடித்ததில் கலுராம் குர்ஜார் என்ற ராணுவ வீரர் மரணமடைந்தார். அவருடன் பணியாற்றிய மற்ற மூன்று வீரர்களும் பலத்த காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த 506ஆவது தள பணிமனை பிரங்கிகளை பழுது பார்த்தல் […]

Read More

ஆபரேஷன் ஷக்தி – இனி திரும்ப சோதனை இல்லை !!

March 30, 2020

கடந்த மார்ச் 27 அன்று பிரதமர் மோடி ஆபரேஷன் ஷக்தி என்ற பெயரில் செயற்கைகோள் எதிர்ப்பு சோதனை நடத்தியதாக அறிவித்தார். இந்த சோதனை மூலம் இந்தியா அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக உலகின் நான்காவது விண்வெளி சக்தியாக உருவெடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்த சோதனை ராணுவ வல்லுநர்களால் விண்வெளியை ராணுவமயமாக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக பார்க்கப்பட்டது. எனினும் தற்போது பேரழிவு ஆயுதங்களை வைத்துள்ள நாடுகளில் மிக பொறுப்பானதாகவும், நம்பகத்தன்மை மிகுந்ததாகவும், மூர்க்கத்தனம் இல்லா நாடாகவும் இந்தியா பார்க்கப்படுகிறது. […]

Read More

முப்படைகள் மற்றும் பாதுகாப்பு அமைச்சக பணியாளிர்கள் தங்களது ஒருநாள் சம்பளத்தை சுமார் (500கோடிகள்) பிரதமர் நிதிக்கு வழங்கினர் !!

March 30, 2020

தரைப்படை, கபபற்படை, விமானப்படை, பாதுகாப்பு தொழிற்சாலைகள் மற்றும் பிற பாதுகாப்பு அமைச்சக பணியாளர்கள் அனைவரும் தங்களது ஒரு நாள் சம்பள தொகையான 500கோடி ருபாயை கொரோனா எதிர்ப்பு போராட்டத்திற்கென வழங்க முன்வந்துள்ளனர். பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் தனது பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ஒரு கோடி ருபாயை வழங்க முடிவு செய்துள்ளார். தேசம் முதலில் மற்றவை எல்லாம் பின்னால் எனும் கொள்கைக்கு இச்செயல் உதாரணமாக உள்ளது. HAL, OFB, DRDO, பல்வேறு கப்பல் கட்டுமான நிறுவனங்களும் […]

Read More